கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகலில் கலந்துகொண்டார்
கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பல்நோக்கு மையக் கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களையும், புதிய குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், WiFi உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம் Learning Centre அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம். இதுபோன்ற மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன். இத்தகைய வாய்ப்புகளைச் சீரிய முறையில் இளைஞர்களும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும்!
கொளத்தூர், கந்தசாமி சாலை – வெங்கடேசன் சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 64 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் பல்வேறு இடங்களில் மின்மாற்றிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 77 மின்மாற்றி தடுப்பு அமைக்கும் பணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.