Home » News » கங்குவா கிரிஞ்ச் சீன்களை மொத்தமாக நீக்கியது படக்குழு. படம் விறுவிறுப்பாக உள்ளது. மக்கள் கருத்து  

கங்குவா கிரிஞ்ச் சீன்களை மொத்தமாக நீக்கியது படக்குழு. படம் விறுவிறுப்பாக உள்ளது. மக்கள் கருத்து  

|

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கங்குவா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் பான் இந்தியா மார்க்கெட்டை குறிவைத்து உலகம் முழுவதும் சுமார் 11,000 திரைகளில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர்.

கங்குவா படம் நெகட்டிவ் விமர்சனங்களால் எதிர்பார்த்தை வரவேற்பு கிடைக்கவில்லை. இதை சரி செய்யும் விதமாக படக்குழு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மக்களின் விமர்சனத்தை ஏற்று படத்தில் இருந்து மேலும் சில காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. முக்கியமாக முதல் 30 நிமிடங்கள் குறித்து அதிகம் விமர்சனம் எழுந்தது. தற்போது அதில் 15 நிமிட காட்சிகளை நீக்கி, ரீ சென்ஸார் செய்துள்ளனர். இதன் பிறகு திரையங்குகளில் அந்த 15 நிமிடங்கள் நீக்கப்பட்ட நிலையில் தான் கங்குவா திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.