சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நெடுஞ்சாலையில் சென்ற பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற ஆம்னி பஸ், சங்ககிரி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பஸ் கவிழ்ந்த சில நொடிகளில் தீப்பற்றி எரிந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.