Home » News » குமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை. வெள்ளக காடாக மாறியது. இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை. வெள்ளக காடாக மாறியது. இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களில் நல்ல பரவலான கனமழை கொட்டி தீர்த்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தக்கலை, மாம்பழத்துறையாறு, ஆணை கிடங்கு பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது

தக்கலையில் அதிகபட்சமாக 85.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, இரணியல், ஆணைக்கிடங்கு, குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியது.