Home » News » திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவிற்கு புதிய விமான சேவை: ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது.

திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவிற்கு புதிய விமான சேவை: ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது.

|

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பதினொன்றாம் இடத்தில் உள்ளது

தற்போது  வார நாள்களில் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருச்சி-தமாம் இடையே விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

அட்டவணையின்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு (அங்குள்ள நேரப்படி) காலை 9.10 மணிக்கு தமாம் சென்றடையும் விமானம் மறு மாா்க்கத்தில் தமாம் கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து (அந்த நாட்டு நேரப்படி) காலை 10.10 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.