Home » News » திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லையே ஏன்: வாருங்கள் தெரிந்து கொள்வும்

திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லையே ஏன்: வாருங்கள் தெரிந்து கொள்வும்

கந்த சஷ்டி விரதமும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் அறுபடை வீடுகளில் மிக கோலாகலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாகும்.. ஆனால், முருகனின் 5ம் படை வீடான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை

திருத்தணி திருத்தலம் முழுவதும் அமைதியாகவே காணப்படும். இதற்கு காரணம், சினம் கொண்ட முருகனின் கோபம் தணிந்து, வள்ளியை திருமணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம் இதுவாகும்.. அதனால்தான் இதற்கு திரு தணிகை என்று பெயர் வந்தது.. இதுதான் மருவி திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது.

தணிகை மலை: திருத்தணிகை மலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ, அல்லது தணிகை மலை இருக்கும் திசை நோக்கி வணங்கினாலோ, தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ, தீராத நோய்நொடிகளும் தீரும் என்கிறது தணிகை புராணம்.. தேவர்களது அச்சம் தணிந்த தலம் இதுவாகும்.. அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் இதுவாகும்.. அதனால்தான், தணிகை எனப்படும் திருத்தணி கோயில் என்றும் அமைதியாகவே காணப்படுமாம். எனவே, திருத்தணியில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக உற்சவராக இருக்கும் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது… அதுமட்டுமல்ல, திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகனுக்கு திருத்தணியில் சினம் தணிக்க மலர்களால் அர்ச்சனையும் செய்யப்படுகிறது. எனவே, திருத்தணிகை அறுபடை வீடுகளில் ஒன்றாக புகழ் பெற்றாலும், முருகனின் சினம் தணிந்து மனம் குளிர்வித்த தலமாக உள்ளதுடன், தேவர்களின் அச்சம் தீர்த்த தலம், பக்தர்களின் கவலைகளை தணிக்கும் தலமாகவும் உள்ளதால், சூரசம்ஹாரத்தன்று முருகனுக்கு மலரஞ்சலி செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.