ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று மரணம் அடைந்தார்.
நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசக்கருவி மற்றும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு முதல்வர் மு.கஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மணப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.