Home » News » தஞ்சாவூர், அரியலூர் சிப்காட்-ன் புது அவதாரம்!!!!

தஞ்சாவூர், அரியலூர் சிப்காட்-ன் புது அவதாரம்!!!!

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட இரண்டு தொழில் பூங்காக்களும் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் கவனம் செலுத்தும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. லெதர் அல்லாத காலணி உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என மாநில தொழில்துறை திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே பெரம்பலூரில் இத்தகைய தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு அவை வெற்றிகரமாக செயல்படுகின்றன. இதனை முன்மாதிரியாக கொண்டு ஆலைகளை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில் தைவானை சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஆலைகளை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. எனவே தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதிதாக அமைய இருக்கும் தொழில் பூங்காக்கள் முழுக்க முழுக்க லெதர் அல்லாத காலணி உற்பத்தியில் கவனம் செலுத்தும் என தெரிகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைய இருக்கும் தொழில் பூங்கா புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. எனவே இங்கே லெதர் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவினால் இது மூன்று மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் என தமிழ்நாடு தொழில் துறை கருதுகிறது.