Home » News » என்னை அ.தி.மு.க.வில் சேர்க்க யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்- ஓ.பன்னீர்செல்வம்

என்னை அ.தி.மு.க.வில் சேர்க்க யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்- ஓ.பன்னீர்செல்வம்

|

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அ.தி.மு.க.வில் எனது விசுவாசத்திற்கு ஜெயலலிதா பலமுறை சான்று அளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும்.

6 மாதம் நான் அமைதியாக இருந்தால் அ.தி.மு.க.வில் என்னை சேர்த்துக் கொள்வதற்காக சிபாரிசு செய்கிறேன் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.

என்னை அழைத்துச்சென்று அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு நாங்கள் யாரையும் கேட்கவில்லை. எனக்காக யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.