Home » News » தல அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ டீசர் வெளியிடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ டீசர் வெளியிடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

|

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பு : லைகா நிறுவனம்

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ் ம்,

படத்தொகுப்பு: என். பி. ஸ்ரீகாந்த்

அஜித் நடிப்பில் கடைசியாக ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. நடிகர் விஜயின் வாரிசு படத்துடன் மோதி நல்ல வசூலைப் பெற்றது.  அதன் பிறகு 2 ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகாததால் ‘விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. சன் டிவி-யின் யூடியூப் பக்கத்தில் விடாமுயற்சி டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டீசரில், விடாமுயற்சி திரைப்படம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, பொங்கல் திருவிழா ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது