New

Breaking- Chandrayaan 3 successfully soft landed on moon

விண்வெளித்துறையில் சரித்திரம் படைத்தது இந்தியா

சந்திரயான்-3 ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

விக்ரம் என்ற நடமாடும் வாகனம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.இதன்படி, இந்தியா நிலவின் மீது மேற்கொண்ட மூன்றாவது முயற்சி வெற்றியளித்துள்ளது. அதன்படி ஏனைய பொருளாதார வல்லரசு நாடுகளைப் பின்தள்ளி நிலவின் தென்துருவப்பகுதியில் சொப்ற் லான்டிக் செய்த முதல் நாடு எனும் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று (23.08.2023) மாலை 6:04 மணிக்கு தரையிறக்கம் நடைபெறவுள்ளதாகவும், எந்த பிரச்சினையும் இல்லாமல் நிலவில் தரையிறங்க விண்கலம் தயாராக உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது

live video
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *