தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த சட்ட மன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காட்டுமன்னார்கோவில் (தனி), திருப்போரூர், பெரியகுளம் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம், திண்டிவனம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பண்ருட்டி ஆகியவை உள்ளன.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பளார்களை அறிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் – திருமாவளவன்,
திண்டிவனம் – வன்னியரசு,
செய்யூர் – சிந்தனைச் செல்வன்
பெரியகுளம் – ஆற்றல் அரசு,
கள்ளக்குறிச்சி – மாலதி,
அரக்கோணம் – எழில் கரோலின்,
பண்ருட்டி – அப்துல் ரகுமான்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஒன்றிய அரசியிலிருந்து மாநில அரசியிலக்கு மாறியுள்ளார்.





