Technology

பயனுள்ள 10 கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்கள்

best Chrome extensions

கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்கள் – அறிமுகம்

தமிழ் மொழியில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான பயனுள்ள தகவல்கள் நாளுக்கு நாள் எமது tamilprime இல் பதிவிடப்படுகிறது. உங்கள் email மூலம் நமது இணையதளத்தை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள் நாளுக்கு நாள் புதுமையான பல விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.


குரோம் நீட்டிப்பு என்பது ஒரு சிறிய மென்பொருள் வகையாகும். அவை நமது குரோம் பிரவுசரில் வழமையாக செய்யும் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்களை கொண்டுள்ளது. பிரௌசர் மூலமாக குறிப்பிட்ட பணிகளை செய்வதற்கும் பயனுடைய உலாவல் அனுபவத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் மென்பொருட்கள் உமது வன்வட்டில் தனித்த கோப்புக்களாக நிறுவப்படாததால் chrome ற்கு வெளியே அவற்றை அணுக முடியாது.

best Chrome extensions
Google Chrome

Extension களை யார் உருவாக்குவது?

இவ்வாறான extension கள் Google மற்றும் ஏனைய மூன்றாம் தரப்பினர்களாலும் உருவாக்கப்பட்டு Chrome webstore இல் இணைக்கப்பட்டுள்ளது.

நீட்டிப்புக்களை எவ்வாறு Download செய்வது?

https://chrome.google.com/webstore/unsupported?hl=en எனும் இணைப்பினூடாக extension களை Download செய்து கொள்ள முடியும்

இவ் நீட்டிப்புக்கள் வன்வட்டில் இடத்தை எடுக்குமா?

இவ்வாறான extension களை நீங்கள் நிறுவும்போது போது அது உங்கள் வன்வட்டில் அல்லாமல் Browser இல் சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

Download செய்த extension களை எவ்வாறு பார்வையிடுவது?

Extension manager எனும் பகுதியில் நீங்கள் நிறுவிய அனைத்தையும் பார்க்க முடியும் மற்றும் அவற்றை தற்காலிகமாக நிறுத்துதல், நீக்குதல் போன்றவற்றை செய்ய முடியும்.

குரோம் நீட்டிப்புக்களை அடிக்கடி update செய்ய வேண்டுமா?

இல்லை. இவ்வாறான extension களுக்கு ஏதேனும் இற்றைப்படுத்தல்கள் வெளியாகும் பட்சத்தில் Chrome browser ஆனது தானாகவே அப்டேட் களை பதிவிறக்கிக் கொள்ளும்.

Webstore களில் வேறு என்ன உள்ளது?

Webstore என்பது extension களுக்கு மேவதிகமாக theme, apps, games போன்ற ஏனைய பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.

Chrome தவிர வேறு browser களிலும் இவ்வாறான extension கள் உள்ளதா?

Chrome போன்று அனைத்து browser களிலும் இவ்வாறான extension கள் உள்ளன. ஆனால் ஒரு browser இலுள்ள extension கள் மற்றைய பிரவுசர் ஒன்றில் பயன்படுத்த முடியாமல் போகலாம் குறிப்பாக கூகுள் எக்ஸ்டென்சன்கள் மைக்ரோசாப்ட் எச் (microsoft edge) போன்ற Chromium அடிப்படையிலான உலாவிகளிலும் இணக்கமானவையாக இருக்கும். ஒவ்வொரு எக்ஸ்டென்சினை நிறுவ முன்னரும் அதன் நம்பகத்தன்மை மற்றும் பயனருடைய மதிப்புரைகள் (User reviews) மற்றும் ரேட்டிங் (ratings) போன்றவற்றை அவதானிக்க வேண்டும்.

best chrome extensions

Tabsnap

நீங்கள் browser இல் ஒன்றுக்கு மேற்பட்ட tabs ஓபன் செய்து வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என கருதுங்கள் திடீரென அவசரமாக நீங்கள் வேறு நோக்கங்களுக்காக செல்ல வேண்டி இருக்கிறது என்றால் கணினியை shutdown செய்தால் மீள எடுக்கும் போது அனைத்தும் டெலீட் ஆகிவிடும் நீங்கள் மீண்டும் வந்து உங்கள் பணியை தொடங்கும் போது அனைத்து tabs களும் மீண்டும் தேவைப்படும் எனவே அப்பணியை tabsnap ஐப் பயன்படுத்தி இலகுவாக மேற்கொள்ள முடியும். Open செய்யப்பட்ட அனைத்து tans களையும் save செய்து வைக்கவும் பின்னர் அனைத்தையும் ஒரே தடவையில் தேவையின் பொழுது மீள open செய்யவும் பயனுடையதாக இருக்கும்.

best chrome extension

Google translate

Google translate எனப்படும் google extension மிகவும் பயனுடையதாகும். இணையத்தில் ஏராளமான வலைத்தளங்களை நாடுகின்றீர்கள் அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட மொழியில் காணப்படும் அம் மொழிகள் நமக்கு புரியாது. உதாரணமாக ஆங்கில மொழியில் ஒரு தகவலை படிக்க வேண்டுமாயின் பலருக்கு கடினமாக இருக்கலாம் ஆனால் இவ் extension ஐப் பயன்படுத்துவதன் மூலம் குறித்த extension மீது ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் முழு வலைத்தளத்தையும் உங்களுக்கு தேவையான மொழியில் மாற்றி அதனை படிக்க முடியும்.

best chrome extension

one tab

நீங்கள் கணினிகளில் வேலை செய்கின்ற பொழுது ஏராளமான tabs களை திறந்த நிலையில் வைத்திருக்கும் பொழுது browser வேகம் குறைவாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள் அவ்வாறான ஒரு பிரச்சினைக்கு தீர்வாக onetab இனைப் பயன்படுத்தலாம். நாம் ஒரு நேரத்தில் அனைத்து tabs களையும் பயன்படுத்த போவதில்லை எனும் அடிப்படையில் onetabஆனது அனைத்து tabs களையும் ஒரு பட்டியலாக (list) மாற்றுகின்றது. பின்னர் அவற்றை தேவையின் பொழுது மீண்டும் அணுக முடியும். இச் செயன்முறையின் மூலம் நினைவகம் விடுவிக்கப்பட்டு உங்கள் browser இன் வேகம் அதிகரிக்கும்.

Grammerly

இணையத்தில் ஏராளமான இடங்களில் நீங்கள் எழுத வேண்டிய சந்தர்ப்பங்கள் வரலாம். உதாரணமாக மின்னஞ்சல்களை எழுதுதல், ஆவணம் ஒன்றை தயாரித்தல், சமூக வலைத்தளங்களுக்கான போஸ்ட்களை தயார் செய்தல் போன்றவற்றின் போது நீங்கள் எழுத்துப் பிழைகளை விடுபவராக இருக்கலாம். ஆதற்கான சிறந்த தீர்வு Grammerly ஆகும். இக்கருவியானது நிகழ்நேரத்தில் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை சரி பார்க்கின்றது. சில மொழிகளுக்கு ஆதரவாக இருந்தாலும் கூடுதலாக ஆங்கில மொழிக்கு பொருத்தமானதாக இருக்கும். blogging பணிக்கு இது மிக்க பயனுடையதாக இருக்கும்.

best chrome extension

Whatfont

இவ் extension பொதுவாக போட்டோசாப் எடிட்டிங், வெப்சைட் டிசைனர் மற்றும் பிளக்கிங் போன்றவர்களுக்கு பயனுடையதாக இருக்கும் அதாவது இணையத்தில் நாம் ஏராளமானவரை வலைப்பக்கங்களை பார்க்கின்றோம் ஏராளமான கட்டுரைகளைப் படிக்கின்றோம். ஆவை ஒவ்வொன்றும் வேறுபட்ட எழுத்து வகைகளில் (Font family) இருக்கும் எமது தேவைகளுக்கு அக்குறித்த font இனை பயன்படுத்த வேண்டும் என்று ஆசை நமக்குள் ஏற்படுவதுண்டு. இணையத்தில் நீங்கள் பார்க்கும் font களுக்கான பெயர்களை கண்டறிய இவ் நீட்டிப்பு பயன்மிக்கதாக இருக்கும்.

Honey

Honey எனப்படும் google extension ஆனது ஆன்லைன் சாப்பிங் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணையத்தில் மேற்கொள்ளும் கட்டளைகளுக்கு (orders) கூப்பன் குறியீடுகள் (Coupon code) இருக்கும் என்பதை பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எளிமையாக சொல்வதானால் இக்கூப்பன் குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு குறிப்பிட்டளவு கழிவு (discont) கிடைக்கப்பெறும். ஆனால் நாம் அதனை பயன்படுத்துவதற்கு மறந்து விடுகிறோம். கழிவுகளை பெறாமல் கூடிய விலைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகிறோம். எனவே உங்களுக்கு இவ் extension மிகவும் பயனுள்ளதாக இருக்கும். honey எனப்படும் கூகுள் நீட்டிப்பு ஆனது இதற்கான சிறப்பான தீர்வை வழங்குகிறது இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்கின்ற பொழுது அதற்குப் பொருத்தமான கூப்பன் குறியீடுகளை தானாகவே இணையத்தில் தேடுகின்றது மற்றும் அவற்றை பயன்படுத்துகிறது. இணையத்தில் அடிக்கடி கொள்வனவு செய்பவர்கள் பணத்தை சேமிக்க விரும்பினால் இவ் extension இனைப் பயன்படுத்தலாம்.

Click and clean

உங்கள் browser வேகம் குறைவாக இருப்பதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அவ்வாறு எனில் இது உங்களுக்கான extension ஆகும். நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த browser ஐ அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியமாகும். browser உடைய வேகத்தை அதிகரிக்க இச்செயன்முறை அவசியமாகும். தட்டச்சு செய்த URLs , தற்காலிக கோப்புக்கள், குக்கீகள், browsing history, empty cache போன்றவை அடிக்கடி அழித்து துப்புரவு செய்வது அவசியமாகும். அத் தேவைகளுக்காக நீங்கள் இந்த extension ஐ பயன்படுத்த முடியும் ஒரே click மூலம் உங்கள் browser இனை சுத்தம் செய்ய இது உதவும்.


இந்த extension களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என்பதை கீழே comment செய்யுங்கள்

இவற்றையும் படியுங்கள்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *