Blockchain தொழினுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
அறிமுகம்
கிரிப்டோகரன்சி மற்றும் Blockchain தொழினுட்பம் நிதி மற்றும் தொழினுட்ப உலகில் புரட்சிகரமான வார்த்தைகளாக மாறிவிட்டன. பண்டமாற்று முறையிலிருந்து விலகி பணப்பயன்பாட்டின் ஆரம்பம் முதல் இன்று வரை பணத்தின் பரிணாம வளர்ச்சியோடு நாமும் இணைந்து பயணித்துக்கொண்டிருக்கிறோம். பண்டைய காலத்தில் உலோகப் பணங்களை பயன்படுத்திய மனிதன் பின்னர் தாள், குற்றி நாணயங்கள், காசோலை மற்றும் வங்கிப்பயன்பாடு, ATM அட்டை கடனட்டை, வரவட்டை என பணத்தின் பரிணாம வளர்ச்சியைக் கூறலாம். அந்த வகையில் இன்றைய காலத்தில் பணத்தின் பரிணாம வளர்ச்சியாக Blockchain தொழினுட்பத்துடன் இணைந்த Cryptocurrency அபார வளர்ச்சியடைந்துள்ளது.
Cryptocurrency என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கின்றது, Blockchain தொழினுட்பம் என்றால் என்ன? உலகப்பொருளாதாரத்தில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, எதிர்காலத்தில் இவை எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். “கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து ஒரே நாளில் மில்லியனரானார்” , “பல மில்லியன் பெறுமதியான மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டது”. இவ்வாறான செய்தியை இணைய உலகில் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள் அவை அனைத்திற்கும் விடை கூறும் வகையில் இப்பதிவு அமையும். எந்த விதமான பக்கச்சார்பும் இல்லாமல் கிரிப்டோகரன்சியின் நன்மை தீமைகளை விவரமாக ஆராய்வோம்.

கிரிப்டோகரன்சி என்பது சாதாரண நாணயம் போன்று தொட்டு உணரக்கூடிய வகையில் இல்லாமல் டிஜிட்டல் வடிவத்தில் இணையத்தில் இருக்கும் பணமாகும். Blockchain தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இப்பணமானது அரசு அல்லது எந்த ஒரு அமைப்பினாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதது. கிரிப்டோகரன்சி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாததால் இவை Decentralized Cryptocurrency என அழைக்கப்படும். இவ்வாறான கிரிப்டோகரன்சிகள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் இருக்கும் இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் இதற்கான மதிப்பு அதிகரிக்கிறது.
கிரிப்டோகரன்சியின் பயன்கள் எண்ணற்றவை என கூறுபவர்களும், கிரிப்டோ தொடர்பான எதிர்மறையான மனப்பாங்கை கொண்டுள்ளவர்களும் உள்ளனர். “இதற்கு எந்த மதிப்பும் இல்லை எதிர்காலத்தில் கிரிப்ரோகரன்சி தான் உலகை ஆளும் பணமாக மாறும்” எனக் கூறி அதன் மதிப்பை உயர்த்துகிறார்கள் எனவும் சிலர் கூறுகின்றனர். கிரிப்டோகரன்சி நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் அபாயமான விடயம் என்ற நோக்கில் சீனா கிரிப்டோகரன்சியின் பயன்பாட்டை தடைசெய்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோகரன்சியின் வரலாறு பற்றி பார்ப்போம்
கிரிப்டோகரன்சிகளின் வரலாறு 1980 களிலிருந்து ஆரம்பமாகின்றது. அன்றைய காலத்தில் இவை சைபர் கரன்சி (Cyber currency) என அழைக்கப்பட்டது. இருப்பினும் 1990 களின் முற்பகுதியிலேயே டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க நெறிமுறைகள் (Cryptocurrency protocol) மற்றும் கிரிப்டோகரன்சி பரவலாக்கத்திற்கு (decentralized) தேவையான மென்பொருட்களும் உருவாக்கப்பட்டது. அதன்படி 2009 ஆம் ஆண்டில் முதல் கிரிப்டோகரன்சி ஆகிய Bitcoin உருவாக்கப்பட்டது.
பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கட்டண முறையானது வங்கிகள் மற்றும் அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாமல் பணம் அனுப்ப வேண்டிய தேவை உடைய மக்களிடையே அக்காலத்தில் மிகவும் பிரபலமடைந்தது. 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் ஒரேயொரு டிஜிட்டல் கரன்சியாக பிட்கோயின் காணப்பட்டது அடுத்த சில ஆண்டுகளில் புதிய பல கிரிப்டோகரன்சிகளும் சந்தையில் நுழைந்தன. பின்னர் 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிரிப்டோகரன்சிகள் இணையற்ற வளர்ச்சியை கண்டது. இதன் விளைவாக 2018 இல் சந்தையில் இருந்த அனைத்து கிரிப்டோகரன்சிகளின் மொத்த மதிப்பு சுமார் 820 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இவ்வாறு கிரிப்டோகரன்சியின் மதிப்பு உயர்ந்ததால் கிரிப்டோ முதலீட்டாளர்களை குறி வைக்கும் மோசடிகளும் இணைந்து அதிகரித்தன.
இன்றைய காலகட்டத்தை எடுத்து நோக்குவோமானால் பிட்காயின் உட்பட 20,000 ற்கும் அதிகமான கிரிப்டோகரன்சிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் உலகம் முழுவதிலும் 300 மில்லியன் கிரிப்டோகரன்சி பயனர்கள் உள்ளனர். 18000 ற்கும் மேற்பட்ட வணிகங்கள். கிரிப்டோகரன்சியை கட்டண முறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி என்றால் என்பதை அறிந்து கொள்வதற்கு அதன் அடிப்படை விளக்கம் , பயன்பாடு மற்றும் வகைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
கிரிப்டோகரன்சி பற்றிய அடிப்படை விளக்கம்
Crptocurrency என்பது டிஜிட்டல் அல்லது மெய்நிகர் நாணய வடிவமாகும். அரசாங்கங்களால் வழங்கப்படும் பாரம்பரிய நாணயங்களைப் போல அல்லாமல் பரவலாக்கப்பட்டு Blockchain தெரழினுட்பத்தில் செயல்படுகின்றன
முக்கிய அம்சம் மற்றும் பயன்பாடு
பரவலாக்கப்பட்ட வலையமைப்பில் செயற்படுவது முக்கிய அம்சமாகும். எந்த ஒரு அமைப்பு அல்லது அரசினாலும் இதற்கு உரிமை கூற முடியாது. பயன்பாடு என்றவகையில் பாதுகாப்பான பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதாகும்.
இன்றைய காலகட்டத்தில் பிரசித்தி பெற்றிருக்கும் ஐந்து கிரிப்டோக் கரன்சிகள்

பாரம்பரிய நாணயம் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான பார்வை (Centralized & Decentralized)
பாரம்பரிய நாணயங்கள் மையப்படுத்தப்பட்டு மத்திய வங்கியின் அதிகாரத்தின் மூலம் அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் Crptocurrency கள் எந்தவொரு அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல் இயங்குகின்றது.
Crptocurrency பரிவர்த்தனைகள் Blockchain எனப்படும் வெளிப்படைத்தன்மையான லெட்ஜரில் பதிவு செய்யப்படுகின்றது.
கிரிப்டோகரன்சியின் நன்மைகள்
நிதிப்பரிமாற்று சேவை
வங்கிகள் இல்லாமல் நிதி சேவைகளை மேற்கொள்வதற்கு இயலுமாக இருக்கும். மக்களை உலகப் பொருளாதாரத்தோடு ஒருங்கிணைப்பதில் டிஜிட்டல் கரன்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணைய அணுகல் மூலம் எவரும் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தலாம்
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை (Enhanced Security and Privacy)
Blockchain தொழினுட்பமானது Cryptographic அல்கோரிதங்களை பயன்படுத்தி பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது பயனர்கள் தங்கள் சொந்த பணத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர். பாரம்பரிய வங்கி அமைப்புக்களுடன் தொடர்புடைய மோசடி நடவடிக்கை போன்ற அபாயங்களை நீக்குகின்றது.
குறைந்தளவிலான பரிவர்த்தனை கட்டணம் மற்றும் நேரம்
வங்கிகள் போன்று கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் இடைத்தரகர்கள் இன்மையால் Transaction fees மிகவும் குறைவாகும். மேலும் transaction களை விரைவாகவும் மேற்கொள்ள முடியும். தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கும் இது பயனுடையதாக விளங்கும்.

Blockchain தொழினுட்பம் என்றால் என்ன?
Blockchain தொழினுட்பம் என்பது பரிவர்த்தனைகளை (transaction) சரிபார்க்கும் ஒரு நுட்பமாகும். இது ஒரு Ledger போன்றது. உலகில் உள்ள பல்வேறு கணினிகளுக்கு இடையே இவ் Ledger விநியோகிக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு transaction களும் ஒரு தொகுதியில் (Block) சேமிக்கப்படுகிறது. பின்னர் அவ் block ஒவ்வொன்றும் மற்றைய block உடன் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு தரவைச் சங்கிலியை உருவாக்குகின்றது. இவ்வாறு ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் பல்வேறு கணினிகளால் சரிபார்க்கப்படுகின்றமையினால் பாதுகாப்பான தொழினுட்பமாக விளங்குகின்றது
Crptocurrency mining என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி மைனிங் என்பது Blockchain network இல் ஒவ்வொரு transaction களையும் சரிபார்த்து பதிவு செய்யும் செயல்முறை ஒன்றாகும். (cryptocurrency mining is a process of validatiing and recording transactions on blockchain network)
கிரிப்டோகரன்சி மைனர்கள் (Miners) சக்தி வாய்ந்த கணினிகளை (Powerful Comouters) பயன்படுத்தி சிக்கலான கணித புதிர்களை தீர்ப்பதன் மூலம் பரிவர்த்தனைகளை சரிபார்த்து Blockchain இல் இணைக்கிறார்கள் இவ் மைனிங் செய்முறைக்கு சக்தி வாய்ந்த கணினிகள் மற்றும் அதிகளவிலான மின்சார வலு அவசியமாகும்.
இவ் மைனிங் செயல்முறை ஈடுபடும் கிரிப்டோ கரன்சி மைனர் களுக்கு புதிதாக மைனிங் செய்யப்பட்ட கிரிப்டோகரன்சிகள் வெகுமதியாக (Reward) அளிக்கப்படுகிறது. இன்றைய காலத்தில் இது மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. மேலும் சிக்கல்தன்மையும் அதிகரித்துள்ளதால் கிரிப்டோ கரன்சி மைனர்கள் இலாபம் ஈட்டுவது சவாலாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கிரிப்டோகரன்சி தொடர்பான சில அண்மையகால தகவல்கள்
சமீபத்திய ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி மீதான ஒடுக்கு முறையை சீனா தீவிரப்படுத்தியுள்ளது கிரிப்டோ வர்த்தகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது
மே 2021ல் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான கட்டணமாக பிட்காயினை ஏற்றுக்கொள்ளாது என அறிவித்தார்
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் Crptocurrency மீதான பாதுகாப்பு விருத்தி செய்யும் நோக்கில் பண மோசடி போன்றவற்றை குறைக்கவும் வரிவிதிப்பு போன்ற ஒழுங்குமுறை கட்டமைப்புகளை பரிசீலித்து வருகின்றன
கிரிப்டோகரன்சியின் பயன்பாடுகள்
International remittances
பாரம்பரிய வங்கி முறைகளை விடுத்து கிரிப்டோகரன்சி மூலம் நாடுகளைக் கடந்து பணத்தை அனுப்ப முடியும். இடைநடுவர்கள் இன்றி குறுகிய நேரத்தில் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமது சொந்த நாடுகளில் உள்ள குடும்பங்களுக்கு பணத்தை அனுப்ப பயனுடையதாக இருக்கும்.
Decentralized Finance
Defi என்பது Blockchain கட்டமைக்கப்பட்ட பல்வேறு நிதி பயன்பாடுகளை குறிக்கின்றது. கடன் வாங்குதல், கடன் கொடுத்தல், காப்புறுதி மற்றும் Yield farming போன்ற அவ்வாறான நிதி பயன்பாடுகள் ஆகும். இடைத்தரகர்கள் (Bank & Financial institution)இன்றி இவற்றை மேற்கொள்ள முடியும்.
கிரிப்டோகரன்சியின் சவால்கள் மற்றும் வரையறைகள்
கிரிப்டோகரன்சி மற்றும் Blockchain தொழினுட்பம் பல நன்மைகளை வழங்கினாலும் அவற்றின் தீமைகள் மற்றும் வரையறைகளை அறிந்து கொள்வதும் இன்றி அமையாது ஒன்றாகும்.
நிலையற்ற தன்மை மற்றும் ஏற்ற இறக்க விலைகள்
கிரிப்டோகரன்சிகளின் விலைகள் நிலையாக இல்லாமல் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றன. இந்த விலை ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளர்களுக்கான அபாயங்களை ஏற்படுத்துகின்றது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் முதலீட்டுக்கு முன் கவனமாகவும் முழுமையாகவும் சந்தையை ஆய்வு செய்தல் அவசியமாகும்.
ஒழுங்குமுறை இன்மை மற்றும் பரவலாக்கப்பட்ட தன்மை
கிரிப்டோகரன்சிகளின் பரவலாக்கப்பட்ட தன்மையினால் Blockchain தொழினுட்பத்தை எந்தவொரு அமைப்பு அல்லது அரசினாலும் கட்டுப்படுத்த முடியாது. இது ஒருவகையில் சாதகமாக இருந்தாலும் முறையான ஒழுங்குபடுத்தல் இன்மையால் முதலீட்டாளர்களுக்கு மோசடி மற்றும் ஹேக்கிங் போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றது. எனவே Crptocurrency இனை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் அதிகாரப்பூர்வமான வலைத்தளங்களை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கிரிப்டோகரன்சி மோசடிகள் மற்றும் அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் தொடர்பான கூடுதலான விவரங்களை பெற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
வரையறுக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளல்
சில நிறுவனங்கள் டிஜிட்டல் பணத்தை கட்டண முறையாக ஏற்றுக் கொண்டாலும் முக்கிய வர்த்தகத்தில் இன்றளவும் பல நிறுவனங்களால் கிரிப்டோகரன்சியை ஒரு கட்டண முறையாக அங்கீகரிக்கப்படாத நிலையில் அவற்றின் நடைமுறை பயன்பாடுகளும் குறைந்து அளவிலேயே காணப்படுகின்றது
சூழல் தாக்கம்
Cryptocurrency mining செயற்பாட்டுக்கு அதிக அளவிலான சக்தி தேவைப்படுகின்றது. மேலும் இது சூழல் பாதிப்பிற்கும் காரணமாக அமையும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள்
முதலீடு செய்வதற்கு சிறந்த க்ரிப்டோகரன்சி எது?
முதலீடு செய்வதற்கான கிரிப்டோ கரன்சி தனிப்பட்டவர்களின் விருப்பம் மற்றும் இடர்களை ஏற்கும் தன்மையை பொறுத்து மாறுபடும் மேலும் எந்த ஒரு முதலீட்டுக்கு முன் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்வதும் சந்தை நிலமைகளை கருத்தில் கொள்வதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்தும் அவசியமாகும்
கிரிப்டோகரன்சி தொழில்நுட்பத்தை ஹேக் (Hack) செய்ய முடியுமா?
மேம்படுத்தப்பட்ட குறியாக்கலை பயன்படுத்தினாலும் Hacking இலிருந்து விடுபடவில்லை சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் உள்ளன
கிரிப்டோகரன்சி சட்டபூர்வமானதா?
கிரிப்டோகரன்சி சட்டபூர்வமானதா இல்லையா என்று கேள்விக்கு பதிலை வழங்குவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளைப் பொறுத்து மாறுபடும். சில நாடுகள் கிரிப்டோகரன்சியை சட்டரீதியாக ஏற்றுக்கொண்டு ஒழுங்கு முறையான கட்டமைப்பை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகின்றனர். மற்றைய நாடுகள் கிரிப்டோ ஆபத்தான விடயம் என்ற நோக்கில் தடைகளை விதித்துள்ளன நீங்கள் வசிக்கும் நாட்டில் கிரிப்டோ தொடர்பான நிலைப்பாட்டை அறைந்து வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
கிரிப்டோ இனை சட்டரீதியாக ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளாத நாடுகள்
US,UK மற்றும் Canada போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் Crypto இனை சட்டரீதியாக ஏற்றுக்கொண்டுள்ள. மேலும் சீனா, சவுதிஅரேபியோ போன்ற நாடுகள் Crypto ற்கு தடை விதித்துள்ளன.
Cryptocurrency mining இனை வீட்டில் மேற்கொள்ள முடியுமா?
Mining இனை மேற்கொள்வதற்கு சிறப்பான வன்பொருட்கள் (Hardware) , தொழில்நுட்ப அறிவு மற்றும் குறைவான விலையில் கிடைக்கும் மின்சாரம், வெப்பம் குறைந்த பிரதேசம் போன்றன அவசியமாகும் எனவே கிரிப்டோகரன்சி மைனிங்கில் இறங்குவதற்கு முன் சாத்தி கூறுகள் பற்றி ஆராய்வது அவசியம்
Cryptocurrency மற்றும் Blockchain ற்கிடையிலான தொடர்பு
Cryptocurrency என்பது நாணயத்தில் டிஜிட்டல் வடிவமாகும். அதேவேளை Blockchain என்பது பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான ஒரு பதிவை பேணும் ledger ஒன்றாகும். Blockchain தொழினுட்பமானது Cryptocurrency பயன்பாடுகளுக்கு அப்பால் NFT போன்ற மேலும் பல முக்கியமான பயன்பாடுகளை கொண்டுள்ளது போன்ற பல்வேறு துறைகளில் Blockchain தொழில்னுட்பம் முக்கியமானதாகும் பலர் கிரிப்டோகரன்சிக்கு எதிர்மறையான மனப்பான்மை கொண்டிருந்தாலும் Blockchain தொழினுட்பத்தை ஆதரிப்பவர்களாக உள்ளனர்
Bitcoin எங்கே வாங்கலாம்
Bitcoin மற்றும் ஏனைய கிரிப்டோகரன்சிகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் இணையத்தில் கிரிப்டோகரனச்சி சந்தைகள் (Exchanges ) பல காணப்படுகின்றன. பிரபலமான சில கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்கள் வருமாறு
முடிவுரை
கிரிப்டோகர்சி என்றால் என்ன? அதன் வரலாறு எவ்வாறானது? அதன் பயன்கள் மற்றும் சவால்கள் மற்றும் இன்றைய காலத்தில் கிரிப்டோவின் நிலை என்ன? என்பது தொடர்பான கிரிப்டோ உலகின் ஆழமான ஆய்வினை இப்பதிவு தெளிவாக விளக்கி இருக்கும் என நம்புகிறோம்.
Disclaimer
Blockchain தொடர்பான கற்கை நெறியொன்றை தொடர…
இவற்றையும் படியுங்கள்
- பயனுள்ள 10 கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்கள்
- உங்கள் வேலையை இலகுவாக்கும் 6 AI கருவிகள்
- USSD குறிமுறை என்றால் என்ன அதன் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்