TechnologyNew

BOC Meta banking சேவை என்றால் என்ன?

Table of Contents

அறிமுகம்

BOC என்பது இலங்கையின் முதற்தர நிறுவனமாகும். நவீன தொழினுட்ப மாற்றத்திற்கேற்ப வங்கிகளும் தமது நடவடிக்கைகளை இலத்திரனியல் மயப்படுத்து வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கும் இவ்வாறான இலத்திரனியல் சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரித்துக் கொள்வதிலும் வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன.

BOC இவ்வாறான இலத்திரனியல் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்னணியிலேயே உள்ளது. Smartpay, smart passbook, B App என்றவாறு பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு இலத்திரனியல் வங்கிச்சேவை பயணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக BOC meta banking என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Commercial வங்கி முதன்முதலில் இச்சேவையை WhatsApp banking என்ற பெயரில் இலங்கையில் இச்சேவையை அறிமுகப்படுத்தியது.


சுமூக வலைத்தளம் என்பது இன்று பாரிய வளர்ச்சியடைந்து மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ளது. WhatsApp, Facebook , Instagram, Twitter என அனைத்தும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களே.

இவை மக்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட ஒரு விடயமாமாகும். எனவே அதன் மூலமாக இலத்திரனியல் வங்கிச்சேவைகளை மக்களுக்கு இலத்திரனியல் வங்கிச்சேவைகளை வழங்கும் போது வாடிக்கையாளர் திருப்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதை வங்கிகள் (BOC) நன்றாக அறிந்து கொண்டு தற்போது BOC Meta banking எனப்படும் சமூக வலைத்தள வங்கிச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவையை வழங்குவது வங்கிகளின் முக்கியமான எதிர்பார்ப்புக்களில் ஒள்றாகும்.


இன்று அனைவரின் கைகளிலும் Smartphone உள்ளது. அதில் கண்டிப்பாக Whatsapp செயலி இருக்கும். WhatsApp இனைப் பயன்படுத்தி Chat செய்வதன் மூலம் வங்கிச்சேவைகளை பெற்றுக்கொள்வதே BOC Meta banking என அழைக்கப்படுகின்றது.

BOC meta banking

BOC Meta banking மூலம் எவ்வாறான சேவைகளை அணுக முடியும் என்பதைப் பார்ப்போம்


WhatsApp மூலமாக வரிசை (Array) அடிப்படையிலான பல்வேறு தகவல்களை அணுக முடியும். கணக்கு மீதிகள் (Account balance), transaction history, credit cards and loan, சேமிப்பு மற்றும் நிலையான வைப்பிற்கான வட்டி விகிதம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.


இதை விட உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ATM/CDM/CRM மற்றும் BOC கிளை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.


நிலையான வைப்பு , கடனுக்கான வட்டி வீதங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். BOC யின் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வட்டி வீதம் போன்ற பொதுவான விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.


மேலும் BOC யின் Digital banking Apps மற்றும் அதற்கான இணைப்புக்களையும் இவ் Digital whatsapp banking சேவை மூலமாக அணுக முடியும்.

BOC meta banking

BOC Meta banking சேவையை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

இச் சேவையை பயன்படுத்த முன் கண்டிப்பாக “Terms and conditions” என வழங்கப்பட்டுள்ள PDF ஆவணத்தை படித்துப் பார்க்க வேண்டும்
ஆவணத்தைப் பார்க்க …

இச் சேவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் நீங்கள் BOC இலத்திரனியல் வங்கிச் சேவைக்கு பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தையுடைய whatsapp கணக்கில் மாத்திரமே இச்சேவையை அணுக முடியும்.

இச்சேவையை ஒரு நேரத்தில் ஒரு சாதனத்தில் மாத்திரமே பயன்படுத்த முடியும். ஒன்றிற்கு மேற்பட்ட சாதனத்தில் அணுக முடியாது.

வெளிநாட்டில் இருந்து BOC Meta banking சேவையைப் பயன்படுத்த முடியுமா?

ஆம். ஆனால் நீங்கள் BOC இலத்திரனியல் வங்கிச் சேவைக்கு பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தையுடைய whatsapp கணக்கில் மாத்திரமே இச்சேவையை அணுக முடியும்.

இச்சேவை whatsApp இனை தவிர வேறு சமூக வலைத்தளங்களில் உள்ளதா?

தற்போது WhatApp இல் மாத்திரமே உள்ளது. எதிர்காலத்தில் ஏனைய சமூக வலைத்தளத்திற்கும் இச்சேவை விரிவாக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

BOC meta banking

BOC யில் Business கணக்கு வைத்திருக்கும் ஒருவரால் அக்கணக்கை whatsapp மூலமாக அணுக முடியுமா?

இல்லை உங்கள் தேசிய அடையாள அட்டையின் கீழ் பதிவு செய்யப்பட்ட Personal account களை மட்டுமே அணுக முடியும்.

BOC Meta banking சேவையைப் பயன்படுத்தி WhatsApp மூலமாகவே பரிமாற்றங்களை செய்ய முடியுமா?

இல்லை தற்போது கணக்கு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான விசாரணைகளை (inquires) மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

இச்சேவையை பயன்படுத்துவதற்கு வங்கியால் ஏதும் கட்டணம் அறவிடப்படுமா?
இல்லை இது BOC இனால் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு இலவசமான சேவையாகும்.

இச்சேவை மூலம் whatsApp இல் செய்யப்படும் அரட்டைகள் (Chats) தன்னியக்கமாக நீக்கப்படுமா?


இல்லை சேவையை பயன்படுத்திய பின்னர் chat களை clear செய்வது வாடிக்கையாளர்களின் பொறுப்பாகும். பாதுகாப்பு நோக்கத்திற்காக chat history இனை clear செய்வது சிறந்தது என இக் கட்டுரையாளர் கருதுகின்றார்.


BOC Meta banking சேவையை பயன்படுத்தும் போது NIC போன்ற தகவல்களை 03 தடவைக்கு மேல் பிழையாக உள்ளிடும் பட்சத்தில் உங்களுக்கான சேவை முடக்கப்படும். அதனை மீளப்பெற அருகில் உள்ள BOC கிளைக்கு செல்ல வேண்டியேற்படும்.

BOC Meta banking சேவை மூலம் நேரடியாக முகவர் ஒருவருடன் chat செய்ய முடியுமா?

ஆம் Service request என்ற மெனுவில் chat with live agent என்பதை தெரிவு செய்வதன் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

BOC Meta banking சேவையை எவ்வாறு unsubscribe செய்வது?


Service request என்ற மெனுவில் unsubscribe என்பதை தெரிவு செய்யவும்

மொபைல் அல்லது சாதனம் தொலைந்து போனால் எவ்வாறு சேவையை துண்டித்துக் கொள்வது?

011 220 4444 அல்லது 1975 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் மூலம் சேவையை இடைநிறுத்திக் கொள்ளலாம்.

தமிழ் சிங்களம் போன்ற மொழிகளில் இச்சேவையை பயன்படுத்த முடியுமா?

இல்லை ஆங்கில மொழியில் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

BOC meta banking

BOC Meta banking சேவையை எவ்வாறு அணுகுவது


மிகவும் இலகுவான செய்முறையாகும் 011 220 4444 என்ற இலக்கத்தை உங்கள் மொபைலில் சேமித்துக் கொள்ளவும் பின்னர் அவ் இலக்கத்திற்கு “Hi” என message செய்து தொடர்பாடலை ஆரம்பித்துக் கொள்ள முடியும். பின்னர் உங்கள் NIC இலக்கத்தை சமர்ப்பித்து Subscribe செய்து கொள்ளுங்கள் பின்னர் தொடர்ச்சியாக வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
கூடுதல் விபரங்களுக்கு காணொலியைப் பார்க்க…

முடிவு


BOC Meta banking இலத்திரனியல் வங்கிச்சேவை என்பது வாடிக்கையாளர்கள் இலகுவாக வங்கிச்சேவையை அணுகுவதற்கான பயனுள்ள விடயமாகும். எனினும் மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது வாடிக்கையாளர்களின் கடமையாகும்.


இக்கட்டுரை BOC Meta banking தொடர்பான பூரணமான தகவல்களை வழங்கியிருக்கும் என நம்புகிறோம். தொடர்ந்தும் tamilprime உடன் இணைந்திருங்கள்.

இவற்றையும் படியுங்கள்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *