உலகம் முழுவதும் உள்ள வித்தியாசமான பாரம்பரிய உணவுகள் பற்றி அறிந்துகொள்வோம்
அறிமுகம்
உணவு என்பது நாடுகளைக் கடந்து மொழிகளை தாண்டி மக்களை ஒன்றினைக்கின்றது. உணவுகள் எப்போதும் மனித கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றது. உலகில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் பழக்கவழக்கங்கள் மரபுகள் மற்றும் புவியியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப உணவு வகைகளும் மாற்றம் அடைகின்றது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் தனித்துவமான சமையல் பாரம்பரியத்தை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பாரம்பரிய உணவுகளின் பின்னணியிலும் வரலாறு மற்றும் கலாச்சாரம் வேரூன்றி உள்ளது. வேறுபட்ட உணவு வகைகளை அறிந்து கொள்வது மற்றும் அவற்றை செய்து பார்ப்பது போன்ற ஆர்வம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். அந்த வகையில் இங்கிலாந்து, தாய்லாந்து இலங்கை, இந்தியா என வெவ்வேறு நாடுகளில் உள்ள வித்தியாசமான சமையல் சாகசங்கள் பற்றி அறிந்து கொள்வோம். உணவுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஒரு சுவையான பயணத்தை தொடங்குவோம்.
கொத்துரொட்டி
கொத்துரொட்டி என்பது இலங்கையின் பிரபலமான தெரு உணவாகும். இந்த சுவையான உணவானது காய்கறிகள், முட்டை இறைச்சி , கடல் உணவுகள் மற்றும் நறுமண மசாலா பொருட்களின் கலவையுடன் துண்டாக்கப்பட்ட ரொட்டியை உள்ளடக்கி தயாரிக்கப்படுகிறது. ரொட்டியை அலுமினிய தகடுகள் கொண்டு வெட்டும் போது ஏற்படும் சத்தம் அதனை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப சைவம், கோழி, மாட்டு இறைச்சி போன்ற பல்வேறு கொத்து வகைகளை சுவைக்க முடியும். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான உணவகங்களை கொத்துரொட்டி பரவலாக தயாரிக்கப்படுகின்றது.
எந்தவொரு உணவாயினும் சுவையாக இருந்தாலும் அதன் ஊட்டச்சத்து அம்சங்களை கருத்தில் கொள்வதும் அவசியமாககும். கொத்துரொட்டி வகைகள் மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்றவாறு அதன் ஊட்டச்சத்துக்கள் மாற்றமடையும். இருப்பினும் பொதுவாக கொத்துரொட்டிகள் காய்கறிகள் மற்றும் மாமிச உணவுகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் கலோரிகள் நிறைந்ததாக காணப்படுகிறது. முட்டைகோஸ், கேரட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. கொத்துரொட்டி தயாரிக்கப் பயன்படும் கோதுமை மா காபோவைதரேட் மற்றும் புரதச் சத்துக்களை கொண்டிருக்கும்.

peking duck
பேக்கிங் வாத்து என்பது சீனாவின் சமையல் கலையின் தலை சிறந்த படைப்பாகும். சீனாவின் பிரபலமான உணவுகளில் ஒன்றாக இவ்வுணவு காணப்படுகின்றது. முதலில் “ஷாவோ யாசி” அல்லது “roast duck” என அழைக்கப்பட்ட இவ்வுணவு இன்று பேக்கிங் வாத்து என அழைக்கப்படுகிறது. சதைப் பற்றுள்ள மெல்லிய மிருதுவான தோலினையுடைய வாத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் சோயா சாஸ், இஞ்சி பூண்டு, சில சமயங்களில் தேன் மற்றும் மசாலா பொருட்கள் கலக்கப்பட்டு ஊறவைக்கப்படுகின்றது. பின்னர் ஈரப்பதனை அகற்றுவதற்காக பலமணிநேரம் காற்றில் உலர்த்தப்படுகின்றது. பின்னர் மூடப்பட்டு வறுக்கப்படுகின்றது அல்லது தீயில் சுடப்படுகின்றது.
மேசையின் முழுவதுமாக வைக்கப்பட்டு வெள்ளரிக்காய் கீற்றுக்கள் மற்றும் சாய்ஸ் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது. சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் உலகெங்கிலும் உள்ள உணவகங்களில் விரும்பப்படும் உணவாக Pecking duck மாறியுள்ளது.

Tom Yum
தாய்லாந்தின் காரமான மற்றும் புளிப்பான சூப் வகை ஒன்றாகும். காரமான தன்மை, புளிப்பு சுவை மற்றும் நறுமண மூலிகைகள் ஆகியவறடறை இணைத்து தயாரிக்கப்படும் இந்த சூப் உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். TomYumஎன்ற சொல் “கொதித்தல்” மற்றும் “காரம் மற்றும் புளிப்பு” என்ற அர்த்தத்தை உடையது என கூறப்படுகின்றது. இது சூப்பின் தன்மையை சரியாக விவரிக்கின்றது. இது உலக அளவில் தாய்லாந்து உணவு வகைகளின் அடையாளமாக விளங்குகின்றது.
காய்கறிகள், எலுமிச்சை மற்றும் இஞ்சி போன்றவற்றை இணைத்து ஒரு கலவையை தயாரித்து கொதிக்க வைக்க வேண்டும் பின்னர் சூடான அக்குழம்பில் வறக்கப்பட்ட மிளகாய் மட்டும் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளல் வேண்டும். பின்னர் காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும்.
இவ் சூப் ஆனது துளசி, கொத்தமல்லி மற்றும் மிளகாய் துண்டுகளுடன் சூடாக பரிமாறப்படுகிறது

Muhammar
சவுதி அரேபிய உணவு வகைகளில் ஒன்றாகும். இனிப்பு மற்றும் நறுமணம் கொண்ட அரிசி உணவொன்றாகும். சவுதிஅரேபிய சமையல் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது பொதுவாக திருமணங்கள் மற்றும் Eid பண்டிகைகளின் பொழுது பரிமாறப்படுகின்றது.
இவ்வுணவானது அரிசி, பேரீச்சம்பழம்; மற்றும் மசாலா பொருட்களை இணைத்து தயாரிக்கப்படுகிறது. இனிப்பு மற்றும் காரமான சுவைகளுக்கு கலவையை கொண்டது.
நீண்ட தானிய அரிசியை எடுத்து கழுவிய பின் ஊற வைக்க வேண்டும். பின்னர் அரிசியை ஓரளவு சமைத்தவுடன் நறுக்கிய பேரீச்சம்பழம் மற்றும் நறுமண மசாலா கலவை சேர்க்கப்படுகின்றது. பின்னர் தாராளமாக நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கப்பட்டு அனைத்து பொருட்களும் மெதுவாக கலக்கப்படுகிறது. பின்னர் உணவு மூடப்பட்டு அரிசி மென்மையாகும் வரை சமைக்கப்படுகின்றது. பெரும்பாலும் இது முக்கியமாக பரிமாறப்படுகிறது மேலும் பக்க உணவுகளாக இறைச்சி மற்றும் வறுக்கப்பட்ட பாதாம், பிஸ்தா போன்றன பயன்படுத்தப்படுகிறது. அரேபிய கலாச்சார நிகழ்வுகளின் போது விருந்தினர்களுக்கு தாராளமாக வழங்கப்படுகிறது.

Bunny chow
தென் அமெரிக்காவின் பிரபலமான ஒரு உணவான “Bunny Show” உள்ளூர்வாசிகளை கவர்ந்த உணவாகும். தென்னாபிரிக்க உணவு வகைகளின் துடிப்பான சுவைகளை காண்பிக்கும் தனித்துவமான உணவாகும்.
கரும்புத் தோட்டங்களில் பணிபுரிந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் கறியை கொண்டு செல்வதற்காக இந்த உணவை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. ஒரு ரொட்டியை மடித்து அதில் சுவையான கறியை நிரப்பி இலகுவில் உண்ண முடியும். ஒரு வட்டமான ரொட்டி கறியை நிரப்புவதற்கான கொள்கலன் போன்று பயன்படுத்தப்படுகிறது. ரொட்டி பொதுவாகக் குழிவான கிண்ணம் போன்ற அமைப்பில் இருக்கும். இது கறிகளை உள்ளே கொண்டிருக்கும்.
துருவிய கேரட், முட்டைக்கோஸ், மிளகாய்த்துண்டுகள் மற்றும் சம்பல் போன்றவற்றின் துணையுடன் இவ்வுணவு பரிமாறப்படுகிறது.

மூலிகை கொத்தமல்லியின் பயன்களை அறிந்து கொள்ள..