Home » News » வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் இந்த 12 டாக்குமென்ட் இருந்தால் போதும்நீங்கள் ஓட்டு போடலாம்!

வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் இந்த 12 டாக்குமென்ட் இருந்தால் போதும்நீங்கள் ஓட்டு போடலாம்!

|

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த 39 நாட்களில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தன. இந்த பிரச்சாரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வடைந்தது. இன்றைய தினம் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள், தேர்தலின்போது தங்களின் அடையாளத்தை நிரூபிக்க 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 17, 2026 அன்று டெல்லியில் அறிவித்தது.

12 மாற்று ஆவணங்கள்

  1. ஆதார் கார்டு (Aadhaar Card)
  2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA)
  3. பணி அட்டை வங்கி அல்லது அஞ்சலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள் (Passbooks)
  4. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு (Health Insurance Smart Card)
  5. ஓட்டுநர் உரிமம் (Driving License)
  6. பான் கார்டு (PAN Card)
  7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (NPR) கீழ் இந்தியப் பதிவாளர் ஜெனரலால் (RGI) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
  8. இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document)
  10. மத்திய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
  11. நாடாளுமன்ற உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள்/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
  12. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID Card)

வாக்காளர்ருடைய பெயர் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் இந்த 12 டாக்குமென்ட் இருந்தால் போதும்நீங்கள் ஓட்டு போடலாம்!