Home » News » BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

|

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டு பூழல் சிறையில் அடைப்பக்கட்டுள்ளர்

இவ்வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆம்ஸ்ட்ராங்க் மனைவியும் இதே கோரிக்கையை வைத்து மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கபட்ட நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. வழக்கில் 6 மாதங்களுக்குள் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.