நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தொகுதி மறுவரை செய்வது தொடர்பாக 3 மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill) 2026 ஆகியவற்றை அறிமுகம் செய்தார். அதேபோல் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு நேற்றும், இன்றும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் திமுக-வை T.R.பாலு ,கனிமொழி, ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தங்களுடைய கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தெரிவித்தனர்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்.
மசோதா மீதான வாக்கெடுப்பில் 489 எம்பிக்கள் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர். எதிராக 211 பேர் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் லோக்சபாவில் மசோதா தோல்வியடைந்தது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று கருப்பு கொடி போராட்டம், மசோதாவை தீயிட்டு கொளுத்தி போராட்டம் என்று கடுமையாக போராட்டம் செய்தார். இந்த நிலையில்தான் இன்று 3 மசோதாக்களும் தோல்வி அடைந்துள்ளன.






