திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்விற்கு அரசியில் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனார். விசிக தலைவர் தனது x பக்கத்தில் கண்டணம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை ‘ரீல்ஸ்’ என்னும் பெயரில் காட்சி பதிவு செய்து சமூக ஊடங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.




