தமிழகத்தில் நாளை மறுநாள் (23.04.2026) சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமாவளவன், செல்வப்பெருந்தகை, வைகோ, அன்புமணி வேல்முருகன், பிரேமலதா உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (21-04-26) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று மே 4ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.






