தழிழர்களின் வாழ்வுடன் இணைந்த பஞ்சாங்கம் எனும் வானியல் நூல்
பஞ்சாங்கம் பார்க்கும் நடைமுறைகள் தமிழ் மக்களின் வாழ்வில் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பஞ்சாங்கம் பார்ப்பது பற்றி எதுவும் அறியாதவர்களாகவே உள்ளனர். அக் கலாச்சாரம் மறைந்து வருகின்றது. நம் முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்து ஏராளமான விடயங்களை இலகுவாக செய்தனர். சடங்குகளை நல்ல நேரம் பார்ப்பது ,காகம் கரைதல், பல்லி சொல் கேட்டல் போன்ற பண்டைய நம்பிக்கைகளை உடைத்தெறிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறே பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கமும் நமக்கு புதிய விடயமொன்றாகவே உள்ளது. அந்த வகையில் இன்று தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தை கொண்ட பஞ்சாங்கம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் அவை எவ்வாறான நன்மைகளை தருகின்றன என்பது பற்றியும் அறிந்து கொள்ளும் ஒரு ஆன்மீகப் பயணத்தை தொடங்குவோம்.
அறிமுகம்
பஞ்சாங்கம் என்பது பண்டைய கையெழுத்து பிரதிகளாகும். இந்த விரிவான நூல்கள் வானியல், ஜோதிடம், பண்டிகைகள் மற்றும் நல்ல நேரங்கள் உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றது. பஞ்சாங்கம் என்பது வானியல் தரவு, சடங்குகளுக்கான நல்ல நேரங்கள், மற்றும் நாளாந்த சூரிய உதயம் அஸ்தமனங்களுக்கான நேரம், மேலும் குறிப்பிட்ட காலத்துக்கான வானிலை முன்னறிவிப்புகள் பற்றிய குறிப்பு அல்லது புத்தகங்கள் ஆகும். இவை பொதுவாக ஓராண்டுக்கான விபரங்களை உள்ளடக்கி ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றது.
திருமணங்கள் மதச் சடங்குகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கான நல்ல நேரங்களை நிர்ணயிப்பதில் பஞ்சாங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. பஞ்சாங்கங்கள் அல்லது ஐந்திறன் என்பது இந்து கால கணிப்பு முறையின் படி கணிக்கப்படுகின்ற “காலஅட்டவணை” என்றும் கிரக சுழற்சிகள் பற்றிய “வானியலை காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகமென்றும்” “வானியல் நூல்”; என்றும் குறிப்பிடப்படுகின்றது. பஞ்சாங்கம் என்ற சொல் பஞ்ச ூ அங்கம் என பிரிக்கப்பட்டு ஐந்து உறுப்புக்கள் என பொருள்படுகின்றது. இந்த ஐந்து உறுப்புகளும் மரபு வழிக்கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும்.
தமிழர்களின் பஞ்சாங்க கணிப்பு அதிசயமான ஒன்றாகும். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது. அந்த ஐந்து விரல்களைக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாக போடும் கணக்கு வியத்தற்குரியதாகும் சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் ஆகியவற்றை கணித்து பஞ்சாங்கத்தில் பதிவிடுவது உள்ளிட்ட ஏராளமான உண்மைகளை பஞ்சாங்கம் தெரிவிக்கின்றது.

பஞ்சாங்கம் தொடர்பான அடிப்படை விளக்கம்
பஞ்சாங்கம் என்பது முக்கிய ஐந்து உறுப்புகளை கொண்டதாகும் வாரம் திதி யோகம் நட்சத்திரம் கரணம் என்பவை ஆகும். திதியை தெரிந்து கொள்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும், வாரத்தை தெரிந்து கொள்வதால் நீண்ட ஆயள் கிடைக்கும், நட்சத்திரத்தை தெரிந்து கொள்வதால் வினைகள் நீங்கும், யோகத்தை தெரிந்து கொள்வதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். கரணத்தை தெரிந்து கொள்வதால் காரிய சித்தி கிடைக்கும்.
வாரம்
இங்கே வாரம் என்பது ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள் வரையான ஏழு நாட்களைக் குறிக்கும்
திதி
திதி என்பது சந்திரனின் பூமியைச்சுற்றியுள்ள சுற்றுப்பாதையின் 30 சமகோணப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும்.
கரணம்
ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகிறது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும்.
நட்சத்திரம்
அச்சுவினி, பரணி, கார்த்திகை, ரோகினி போன்ற இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிக்கும்
யோகம்
சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். இருபத்தேழு நட்சத்திரங்களையும் கடக்க எடுக்கும் காலப்பகுதிக்கு இருபத்தேழு யோகப் பெயர்கள் உண்டு.
பஞ்சாக்கத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள்
வானியல் தரவு
பஞ்சாங்கங்களானது நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் சந்திரனின் நிலைகள் போன்ற வானியல் விவரங்களை வழங்குகின்றன கிரகணங்கள், விண்கற்பொழிவுகள் போன்ற தகவல்களை வழங்குகின்றது.
வானிலை முன்னறிவிப்புக்கள்
குறிப்பிட்ட காலப்பகுதிக்ககான வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் பருவநிலை மாற்றங்கள் போன்ற வானிலை முன்னறிவிப்புகளை கொண்டுள்ளது
கடல் அலை பற்றிய தகவல்கள்
கடலோரப் பகுதிகளில் உயர்ந்த மற்றும் தாழ்வான அலைகளின் நேரத்தை சரியாக துல்லியமாக கூறுகின்றது மீன்பிடித்தல் மற்றும் கடல்சார்ந்த பணிகளால்; ஈடுபடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
சூரிய உதய மற்றும் அஸ்தமன நேரங்கள்
பஞ்சாங்கங்கள் தினசரி சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கான நேரங்களை வழங்குகின்றது தனிநபர்கள் தங்கள் நடவடிக்கைகளை அதற்கேற்றவாறு திட்டமிட இது உதவும்.
விவசாயம் பற்றிய தகவல்கள்
பஞ்சாங்கங்கள் விவசாயிகளின் நடவு மட்டும் அறுவடைக்கு தகுந்த காலப்பகுதிகள், பயிர் சாகுபடி மற்றும் பூச்சி மேலாண்மை பற்றிய குறிப்புகளை கொண்டுள்ளது.
ஜோதிட கணிப்புக்கள்
குறிப்பிட்ட இராசிக்கான இவ் ஆண்டின் தனிப்பட்ட குணாதிசயங்கள் இராசிபலன்கள் மற்றும் கிரக நிலைகள் அடிப்படையில் ஜோதிட கணிப்புகளை வழங்குகிறது

பஞ்சாங்கத்தில் கூறப்படும் சில பலன்கள்
பல்லி விழும் பலன்
பல்லி என்பது நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவைக் குறிக்கின்றது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தமிழர்கள் வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் தீபாவளி முழுமை அடையாது என்பர். தீபாவளி என்று வீட்டில் பல்லியை கண்டால் செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. நமது புராணங்களில் கூட பல்லி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது நமது உடலில் விழுவது நல்ல பலன்களையும் தோ~ங்களையும் ஏற்படுத்துகிறது. பல்லி உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன் என்பதை பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது அவை தொடர்பான சில விவரங்கள் கீழே வருமாறு.
தலை
தலையில் பல்லி விழுந்தால் அபசகுனமாகும் இவ்வாறு தலையில் பல்லி விழுவது குடும்பத்தில் அல்லது உறவினர்களின் மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.
நெற்றி
நெற்றியில் பல்லி விழுந்தால் அதிர்~;டம் காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் நெற்றியின் இடது பக்க நெற்றியில் பல்லி விழுந்தால் உங்களுக்கு புகழ் கிடைக்கப்பெறும். வலது பக்க நெற்றியில் பல்லி விழுந்தால் செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
முகம்
முகம் முகத்தில் பல்லி விழுந்தால் உறவினர்கள் நம் வீட்டுக்கு வருகை தர இருக்கிறார்கள் என்று அர்த்தம் அதுவே கன்னத்தில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று அர்த்தம்.
கை அல்லது கால்
இடது கை அல்லது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் சந்தோமாக இருக்கப் போகிறீர்கள் என்று பொருள். அதுவே வலது கை அல்லது காலில் பல்லி விழுந்தால் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஒன்று கூறப்படுகிறது
இவ்வாறு உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ப பல்லி விழும் பலன் மாற்றமடைகிறது
கனவின் பலன்கள்
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்கிறோம். ஓவ்வொரு கனவிற்கும் ஏற்றபடி பலன்கள் மாறுபடும். இவ்வாறான பலன்கள் பஞ்சாங்கத்தில் கூறப்படுகிறது.
- வானில் தோன்றும் வானவில்லை ஒருவர் கனவில் கண்டால் அவருக்கு செல்வம் செழிக்கும் மற்றும் உயர் பதவி கிடைக்கும்.
- தெய்வங்களை ஒருவர் கனவில் கண்டால் அவருக்கு எதிர்பாராத புதையல் கிடைக்கும்.
- கோவிலை ஒருவர் கனவில் கண்டால் அவரின் புகழ் ஓங்கும்.
- நிலவை கனவில் கண்டால் கணவன் மனைவி இடையே பாசம் அதிகரிக்கும்.
- தேவலோக கன்னியர்களை ஆண்கள் கனவில் கண்டால் எதிர்பாராத நன்மைகள் கிட்டும்.
- ஒருவர் மேலிருந்து கீழாக விழுவது போல் கனவு கண்டால் அவருக்கு பொருள் நாசம் ஏற்படும் மேலும் மன குழப்பம் உண்டாகும்.
- வாடிய மலர்களை ஒருவர் கனவில் கண்டால் அவரை கொடிய நோய்கள் தாக்கும்.
- தனியாக சாப்பிடுவது போல் கனவு கண்டால் அவருக்கு துன்பம் மற்றும் தொழில் கஷ்டம் உருவாகும்
- ஆடையில்லா நிர்வாண கோலத்தை ஒருவர் கனவில் கண்டால் அவருக்கு அவமானம் நிகழும்
முடிவு
இன்றைய காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும் ஜோதிடக் கலைக்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. எனினும் நவீன கால கருவிகள் இல்லாத பண்டைய காலத்தில் மகரி~pகள் தங்கள் சூரிய சந்திர கிரகணங்கள் உட்பட பல தகவல்களை துல்லியமாக கணிப்பதற்கு இப்ப பஞ்சாங்கங்கள் தான் உதவியாக அமைந்தது என குறிப்பிடப்படுகின்றது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் இன்ன தேதியில் இத்தனை வினாடியில் சூரிய கிரகணம் தென்படும்ஃதென்படாது, கிரக அளவு, மற்றும் கிரகணம் எந்தப் பகுதிகளில் தென்படும் மற்றும் தென்படாது என்பவற்றை எல்லாம் மிகக் கச்சிதமாக பஞ்சாங்கத்தில் செதுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது. கிரகண காலத்தில் எவைகளை செய்யலாம் செய்யக்கூடாது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பஞ்சாங்கம் பார்க்கும் நடைமுறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களிடையே நடைமுறையில் உள்ளது. இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் அதனை மேலும் ஆராய்ந்து பயன்படுத்துவர்கள் மிகக் குறைவே அதனால் தான் நாம் உலகில் இன்று பின்தங்கி உள்ளோம் இனியாவது நமது வானவியல் கணிதங்களை ஆராய்ந்து வாழ்வில் முன்னேறுவோமாக! பஞ்சாங்கம் என்பது உமது வாழ்வில் விசேட நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் முக்கிய கருவியாகும் இதனைப் பற்றி அறிந்திருத்தல் இந்து மக்களாகிய அனைவரினதும் கடமையாகும்