PrimeCooking

மூலிகை கொத்தமல்லியின் பயன்களை அறிந்து கொள்வோம்

அறிமுகம்

கொத்தமல்லி என்பது ஒரு மூலிகைப் பொருளாகும் மேலும் இது உணவுகளில் சுவைச்சரக்காக பயன்படுத்தப்படுகின்றது இது Apiaceae எனப்படும் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது. கொத்தமல்லிச் செடியானது 50Cm உயரம் வரை வளரக்கூடியது.இதனை வெளிநாடுகளில் Culantro என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றது. இது மிகவும் நறுமணம் வீசக்கூடிய மூலிகைப்பொருளாகும். இந்த நறுமண மூலிகையான பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. மெக்சிக்கன் கொத்தமல்லி, தாய்லாந்து கொத்தமல்லி, நீண்ட இலைக்கொத்தமல்லி, அயல்நாட்டுக் கொத்தமல்லி, மூலிகைக்கொத்தமல்லி ரெகாவோ(Recao), நிழல் பெனி (Shadow beni), மற்றும் முள் கொத்தமல்லி என உலகின் பல பகுதிகளில் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

தோற்றம்

இது கரீபியன் பகுதிகளில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மேற்கந்திய தீவுகளில் மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ ஆகிய பகுதிகளை தாயகமாகக்கொண்டது

சுவை

கொத்தமல்லியின் வேர், இலை, விதை ஆகியவை சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றது. ஏனைய மூலிகைத் தாவரங்களைப் போல் அல்லாமல் கொத்தமல்லியானது புளிப்பும் கசப்பும் கலந்துள்ள சுவையையுடையது. இது உணவுக்கு சேர்க்கக்கூடிய சுவையை வழங்குகின்றது

பயிரிடல்

நிலத்தினை உழுது உரம் இறைத்து பாத்தி கட்டி நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தில் கொத்தமல்லி விதைகளை தூவி நிலத்தினை கீறி விட வேண்டும் வறண்ட மண்ணிலும் இவை வளர்கின்றன. இத்தாவரம் ஆண்டு முழுவதும் பூக்கும். கொத்தமல்லி விதைகளை பயிரிட்டு ஒருமாத காலத்தினுள் செடி முளைத்து விடும். கொத்தமல்லியானது சொட்டு நீர்ப்பாசன முறையில் பயிரிடப்படுகின்றது

கொத்தமல்லி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கொத்த மல்லி விதையில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. மேலும் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், கல்சியம், வைட்டமின் K, பாஸ்பரஸ், போன்று ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஈரப்பதம் 86-88 சதவீதமும் புரதம் 0.6 சதவீதமும், கொழுப்பு 6.5 சதவீதமும், காபோவைதரேற் 1.7 சதவீதமும் காணப்படுகின்றது.

பயன்கள்

கண்பார்வையை ஊக்குவிக்க
ஆரோக்கியமான கண்களைப் பெற கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கணினிகளில் வேலை செய்வோருக்கு கண்கள் எளிதில் பாதிப்படையும். இதற்கு தீர்வாக கொத்தமல்லியை பயன்படுத்த முடியும். கண்கள் புத்துணர்வு பெறுவதற்கு கொத்தமல்லியை நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரில் கண்களை கழுவவேண்டும் . மேலும் கண்களில் ஏற்படும் வெண்படலத்தை குணப்படுத்தவும் கொத்தமல்லி உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன


இரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கு
இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு பங்களிக்கும்.


செரிமான உதவி

கொத்தமல்லி நீண்டகாலமாக பாரம்பரிய மருத்துவத்தில் செரிமான உதவியாகப் பயன்படுத்தப்படுகின்றது உடலில் செரிமான நொதியங்களின் உற்பத்தியைத் தூண்டும், சரியான செரிமானத்தை ஊக்குவிக்கும் மற்றும் வீக்கம், அஜீரணம் போன்ற சிக்கல்களைக் குறைக்கும். கொத்தமல்லியை தொடர்ந்து உட்கொள்வது செரிமான அசௌகரியத்தை போக்கவும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

பக்டீரியா எதிர்ப்பு பண்புகள்


உடலிற்கு தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கின்றது. உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றது. கொத்தமல்லியை உணவில் சேர்ப்பது பக்டீரியா தொற்றுக்கு எதிரான இயற்கையான பாதுகாப்பாக செயற்படும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கான நிவாரணி

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சினை, மயக்கம், தலைசுற்றல் போன்றவற்றிலிருந்து விடுபட கொத்தமல்லிறை நீரில் கலந்து பருக முடியும்.

மேலும் கொத்தமல்லியானது எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்தவும், உடலுக்கு தீமை பயக்கும் கொலஸ்ரோல் அளவை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குடல் மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மூளையைப் பாதுகாக்கவும் உதவுகின்றது.

காய்ச்சல், குளிர், வாந்தி, வயிற்றுப்போக்கு, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, வலிப்பு ஆகியவற்றுக்கான நிவாரணமாக கொத்தமல்லியை பயன்படுத்த முடியும். நிமோனியா, காய்ச்சல், மலச்சிக்கல், மற்றும் மலேரியாக் காய்ச்சல் ஆகியவற்றுக்கு இதன் இலையை தண்ணீரில் வேகவைத்து குடிக்க முடியும்.

இரவில் நன்றாக தூக்கம் வருவதற்கு இவ் மூலிகை உதவி செய்யும். உடல் சூட்டைக்குறைப்பதற்கு கொத்தமல்லி இலையை பச்சையாக உண்பது சிறந்த பலனைத்தரும். மேலும் இவ் மூலிகைப் பொருளானது வயதாகும் போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளை தாமதப்படுத்துகின்றது.

உணவு

கொத்தமல்லியை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். மேலும் காபி தண்ணீர் மற்றும் சூப் போன்றவற்றையும் செய்து உண்ண முடியும். சட்னி போன்றவற்றையும் தயாரிக்கின்றனர்

கொத்தமல்லியினால் ஏற்படும் பக்கவிளைவுகள்

கொத்தமல்லி ஒரு மூலிகைப்பொருளாகும். இதனை சரியான அளவில் எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது. “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள்” எனவே கொத்த மல்லியை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சுவாசக்கோளாறு, மூச்சிரைப்பு ஏற்படுவதோடு இரத்த அழுத்தம் குறைவதற்கும் காரணமாக அமையலாம். கொத்தமல்லியில் உள்ள அமிலக்கூறுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். கொத்தமல்லியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே கொத்தமல்லியை உணவாக எடுத்துக்கொள்ளும் போது ஒவ்வாமையுடையவர்கள் அதனை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது அவசியமான ஒன்றாகும்.

முடிவு

கொத்தமல்லியானது அதன் குறிப்பிடத்தக்க சுவை மற்றும் நறுமணத்துடன் சமையலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதன் நன்மைகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் பல்வேறு அம்சங்களுக்கு உதவுகின்றது. செரிமானத்திற்கு உதவுவது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுதல், கண்பார்வையை ஊக்குவிப்பதற்கு என அதன் நன்மைகள் நீண்டுகொண்டே செல்கின்றது.
கொத்த மல்லியை பச்சையாக சாப்பிடுவது, சூப் தயாரித்து உண்பது என பல்வேறு வழிகளில் உணவுக்கு எடுத்துக்கொள்ள முடியும். இருப்பினும் கொத்தமல்லியானது சிலருக்கு ஒவ்வாமை போன்ற எதிர்மறையான விளைவுகளையும் வழங்கலாம். எனவே அவ்வாறானவர்கள் கொத்தமல்லியை பயன்படுத்த முன் சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியம். முடிவில் கொத்தமல்லி ஒரு குறிப்பிடத்தக்க மூலிகையாக உள்ளது, இது உணவுகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது நல்வாழ்வுக்கும் பங்களிக்கின்றது. அதன் நன்மைகள் ஏராளனானவையாகும். எனவே உங்கள் சமையல் சாகசங்களில் கொத்த மல்லியின் சுவை மற்றும் அதன் பலன்களை அனுபவித்துக்கொள்ளுங்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *