Technology

உங்கள் வேலையை இலகுவாக்கும் 6 AI கருவிகள்

அறிமுகம்

இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாகப் பேசப்படும் செயற்கை நுண்ணறிவு என்பது (AI) பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

மனிதனுக்குள்ள அறிவாற்றல் மற்றும் திறமைகளை இயந்திரங்களுக்கு வழங்குவதன் மூலம் மனிதனைப்போன்று சிந்தித்து செயற்படக்கூடிய நுண்ணறிவு இயந்திரங்களுக்குள்ள திறன்களே செயற்கை நுண்ணறிவாகும். வணிகச் செயற்பாடுகள், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, நிதி மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளில் வேலைகளை இலகுவாக்குவதற்கும் செலவுகளைக்குறைப்பதிலும் சக்திவாய்ந்த AI கருவிகள் பயன்படுத்தப்படுகின்றது.

வரவிருக்கும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து அனைத்து துறைகளையும் ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வணிக விமானங்களில் தன்னியக்க பைலட் வசதிக்கு பங்களித்தல் (Auto pilot in commercial flight), Spam filter on email, face recognition, voice to text feature என AI இன் பயன்பாடுகள் ஏராளமானவை.
அந்த வகையில் நாமும் AI தொழினுட்பத்திற்கு இசைவாக்கமடைந்து வேலைகளை செய்து கொள்வதும் இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய உலகில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஐந்து செயற்கை நுண்ணறிவு கருவிகள் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

ChatGpt

Chat Generative Pre-trained Transformer என்பது Open AI இனால் உருவாக்கப்பட்ட உரை அடிப்படையிலான பதிலை வழங்குவதற்கான அதிநவீன சக்திவாய்ந்த AI கருவியாகும்.

தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் வணிகநிறுவனங்களுக்கும் மிக்க பயனுடையதாக இருக்கும். கல்வித்துறையில் மாணவர்களிற்கு ஏராளமான தகவல்களைப் பெறுவதற்கு மூன்றாவது கரமாக விளங்குகின்றது.

கட்டுரைகளை உருவாக்குதல் மின்னஞ்சல்களை உருவாக்குதல் மற்றும் செய்நிரலாக்க குறிமுறைகளை உருவாக்குதல் போன்ற பயனுள்ள அம்சங்களை இவ் AI கொண்டுள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட துறைகளில் வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தானியங்கு முறையில் பதில்களை வழங்கவும் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும் இவ்வாறான உரை அடிப்படையிலான AI கள் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

மனிதனைப்போன்றே பதில்களை வழங்கும் திறன் கொண்டதால் இன்றைய அனைவராலும் பயன்படுத்தப்படும் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகின்றது.
மேலும் அறிய…

ChatGpt

Descript

Descript என்பது Audio மற்றும் Video இனை சிறந்த முறையில் கையாளுவதற்கென வடிவமைக்கப்பட்ட AI கருவியாகும் Podcaster, Video editor, Journalist மற்றும் Content creator போன்றவர்கள் Audio மற்றும் Video editing தேவைகளுக்கு உதவியாக இதனைப் பயன்படுத்தலாம்.

Descript இன் முக்கிய பயன் என்னவெனில் நீங்கள் பேசும் வார்த்தைகளை உரையாக (text) மாற்றுவதற்கும், உரைகளை கொண்டு குரல்களை உருவாக்கவும் முடியும். ஏராளமான வேறுபட்ட குரல்களில் இவ் AI இனால் வெளியீட்டை வழங்க முடியும். இதில் பேச்சின் ஒலி மற்றும் தொனி மனிதனைப்போன்று இயற்கையாக இருப்பது பயனுள்ளதாகும். Descript இல் உங்கள் சொந்த குரலை import செய்து பல்வேறு உரைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

DALLE-E 2

சமீபத்தைய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றோம். DALLE-E 2 எனும் AI ஆனது யதார்த்தமான படங்களை உருவாக்கும் திறன் கொண்டதாகும் (image generation).


உரை உள்ளடக்கத்தை (Text description) அடிப்படையாகக் கொண்டு உயர்தரம்(high quality) கொண்ட விம்பங்களை உருவாக்கும் AI ஆகும். DALLE-E 2 எனும் AI ஆனது DALLE-E இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
உதாரணமாக பயனர் ஒருவர் “நீல நிறப்பின்னணியில் சிவப்பு அப்பிள்” என்றவாறான உரைகளை வழங்கும் போது அதற்கான யதார்த்தமான படங்களை உருவாக்கும்.

நிறுவனங்கள் தமது பொருட்களுக்கான விளம்பரத்தை இலகுவாக உருவாக்கவும், Graphics design செய்பவர்கள் text அடிப்படையிலான விம்பங்களை விரைவாக உருவாக்கவும் பயனுடையதாக இருக்கும். Advertising, Gaming, Digital Art, Graphics desin போன்றவற்றுக்கு பயனுடைய AI கருவியாகும்.

Heyday

இன்றைய டிஜிட்டல் (Digital) உலகில் வணிகங்கள் தமது வாடிக்கையாளருடன் தகவல் தொடர்புகளை ஏற்படுத்தவும் வாடிக்கையார் திருப்தியை அதிகரிக்கவும் புதுமையான வழிகளை தொடர்ந்து தேடுகின்றன.

Heyday AI கள் மேம்படுத்தப்பட்ட Chatbot தொழினுட்பம் மூலம் இதற்கான புரட்சிகரமான தீர்வாக அமையும். இவ் செயற்கை நுண்ணறிவுத்தொழினுட்பமானது இயந்திரக்கற்றலை பயன்படுத்தி வாடிக்கையாளருடன் மனிதனைப்போன்ற இயற்கையான உரையாடல்களை வழங்குகின்றது. தன்னியக்கமான முறையில் வாடிக்கையாளருக்கான தகவல் மற்றும் உதவியை வழங்குகின்றது. Heyday ஆனது பிரபலமான உரையாடல் தளங்களாகிய Facebook, WhatsApp, Shopify chat போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து செயற்படக்கூடிய வசதியையுடையது.


Heyday ஆனது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது. முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தத்தளம் செயற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.

AI

Pictory.com

இது textஅடிப்படையிலான உயர்தரமுடைய Video இனை உருவாக்குவதற்குப் பயன்படும். வீடியோ எடிட்டிங் செயல்முறையை எளிதாக்குகின்றது. மற்றும் அதிநவீன AI algorithms களை பயன்படுத்துவதன் மூலம் text உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து தானியங்கு முறையில் வீடியோக்களை உருவாக்குகின்றது.


Script இனை வீடியோவாக மாற்றுதல், Article இனை Video வாக மாற்றுதல், விம்பங்களை(images) வீடியோவாக உருவாக்குதல் மற்றும் அவற்றை editi செய்தல் போன்றவற்றை தன்னியக்கமாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு இவ் AI பயனுடையதாக இருக்கும். Youtube சேனல்களிற்கான வீடியோக்களை உருவாக்குவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

Google AI

தொழினுட்பம் மூலம் கண்டுபிடிப்பு துறையில் எப்போதுமே Google நிறுவனம் முன்னணியில் இருந்து வருகின்றது. தொழினுட்ப உலகில் அதன் குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்று Google AI ஆகும். மிகப்பெரிய தேடல் நிறுவனம் Google இனால் பல விதமான AI கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக்கருவிகள் செயற்கை நுண்ணறிவுத்துறையின் அதிநவீன வளர்ச்சியை ஊக்குவித்தது எனலாம்.


உதாரணமாக email கணக்கினை நாம் அனைவரும் கண்டிப்பாக வைத்திருப்போம். மற்றைய மின்னஞ்சல் சேவைகளை விட gmail களில் Spam குறைவாக இருப்பதற்கு காரணம் Google இனுடைய சிறப்பான AI அல்கோரிதமாகும். Google AI ஒவ்வொரு நிமிடமும் கிட்டத்தட்ட 10 மில்லியன் Spam மின்னஞ்சல்களை தடுக்கின்றது மேலும் 99.9% ற்கும் அதிகமான Spam மற்றும் Phishing முயற்சிகளிலிருந்து மின்னஞ்சல்களைப் பாதுகாக்கின்றது.
Google இனுடைய சில AI கருவிகள்
Google Assistant , Google AI , Google Golaboratory , Google Opensource , Google Bard AI

Google Bard AI

முடிவு

இன்றைய காலகட்டத்தில் AI இன் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அதன் மூலம் எவ்வாறு நமது வேலைகளை இலகுவாக்கலாம் என்பது தொடர்பான சக்திவாய்ந்த ஆறு கருவிகள் பற்றி அறிந்துள்ளோம். image களை உருவாக்குவது, கட்டுரைகளை தன்னியக்கமாக வடிவமைத்தல், Video களை உருவாக்குதல் போன்ற வேலைகளை இலகுவாக்கும் இக்கருவிகள் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்

AI கருவிகளை பெரிய நிறுவனங்கள் மட்டும் தானா பயன்படுத்த முடியும்?
இன்றைய காலத்தில் சிறியளவிலான வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் வகையில் AI கருவிகள் தாராளமாக உள்ளன.


AI கருவிகளை இலவசமாகப் பயன்படுத்தலாமா?
AI கருவிகளில் உள்ளடங்கியுள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான விலை தீர்மானிக்கப்படகின்றது. எனினும் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஏராளமான AI கருவிகளும் உள்ளன.


AI கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இணைய இணைப்பு அவசியமா?
சில AI கருவிகள் Cloud அடிப்படையிலான சேவைகளை வழங்குவதற்கும் கூடுதலான வளங்களை அணுகுவதற்கும் இணைய இணைப்பு தேவைப்படலாம். இருப்பினும் இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக்கூடிய AI கருவிகளும் உள்ளன.


மனிதர்களுக்கு பதிலாக AI கருவிகளை முழுமையாக பதிலீடு செய்யலாமா?
AI கருவிகளினால் தன்னியக்கமாக செயற்பட முடியும் என்றாலும் மனிதர்களுக்கு பதிலாக முழுமையாக பிரதியீடு செய்வதற்குப் பதிலாக மனிதர்களின் திறன்களை அதிகரிப்பதற்கு பயன்படுத்தலாம்.

இவற்றையும் படியுங்கள்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *