GeneralPrime

உலகின் பிரபலமான 10 விண்வெளி ஆய்வு மையங்கள் (best space agencies in the world)

அறிமுகம்

அண்மைக்காலமாக விண்வெளி தொடர்பான செய்திகளும் விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான விடயங்களும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது இதற்கு உதாரணமாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமாகிய ISRO இனால் அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலத்தை குறிப்பிடலாம் .இவ்வாறான நிகழ்வுகளைத் தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகில் உள்ள அனைவர் மனதிலும் விண்வெளி பற்றிய தேடலும் அது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பிரபஞ்சம் தொடர்பாக பண்டைய காலத்தில் இருந்தே கருத்துக்கள் நிலவி வருகின்றது மனிதனில் அறிவியல் வளர்ச்சியால் ஏராளமான விடயங்களை பூமியில் கண்டறிந்தான் பின்னர் படிப்படியாக முன்னேறி பூமியை கடந்தும் தனது சாதனைகளை ஆரம்பித்தான் சூரியன் சந்திரன் செவ்வாய் கிரகம் என ஆராய்ச்சிகள் தொடர்ந்து வண்ணமே இருக்கின்றது.

ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி மேற்கொண்டு ஆராய்ச்சிகள் போதாது என்று நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை செய்தான் மேலும் விண்வெளி ஆய்வு மையங்கள் விண்வெளியிலேயே நிறுவப்பட்டு அதிலிருந்தும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது.
மனிதன் எவ்வளவு தான் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல விடயங்களை கண்டறிந்தாலும் பிரபஞ்சம் தொடர்பான முழுமையான அறிவைப் பெறுவது என்பது இயலாது ஒன்றாகவே இருந்து வருகின்றது.

பிரபஞ்சம் எனப்படும் பேரண்டம் (universe) பல விந்தைகளை கொண்டுள்ளது அது எல்லையற்றது அதனை ஒரு குறுகிய பார்வைக்குள் அடக்கி விட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அமெரிக்கா ரஷ்யா இந்தியா என உலகம் முழுவதும் பல விண்வெளி ஆய்வு மையங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சியில் மேற்கொள்வதில் தமக்கிடையை போட்டி போட்டுக் கொள்கின்றன அந்த வகையில் அவ்வாறான பத்து விண்வெளி ஆய்வு மையங்கள் வெற்றி அறிந்து கொள்வோம்.

top space agencies in the world
top space agencies in the world

முதலில் இவ் விண்வெளி ஆய்வு மையங்களால் இவ்வாறான செயற்பாடுகளிடம் பெறுகின்றன என்பதை பார்க்கலாம்.

  • செயற்கைகோள் வரிசைப்படுத்தல்
  • கோள்களை ஆய்வு செய்தல்
  • விண்வெளி நிலையத்தை நிர்வகித்தல்
  • விண்கல மேம்பாடு
  • விண்கலக்குப்பைகளை நிர்வகித்தல்
  • மேலும் அறிந்துகொள்ள …

போன்றன இவ்வாறான விண்வெளி ஆய்வு மையங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர்வரும் காலங்களில் விண்வெளி துறையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என்பது இன்றைய நிகழ்வுகள் மூலமாக கண்கூடாக தெரிகிறது அந்த வகையில் வளமை போல் என்றும் புதிய மற்றும் சுவாரசியமான தகவல்களை வழங்கும் நமது இணையதளத்தின் ஊடாக இன்றைய நாளில் உலகில் உள்ள அனைவராலும் பேசப்படுகின்ற பத்து பிரபலமான விண்வெளி ஆய்வு மையங்கள் தொடர்பாக அறிந்து கொள்வோம்.

நாசா (NASA- National Aeronautics and Space Administration)

அமெரிக்காவினால் 1958 இல் NASA (National Aeronautics and Space Agency) நிறுவப்பட்டதிலிருந்து விண்வெளி ஆய்வில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அப்பல்லோ நிலவு தரையிறக்கம் மற்றும் செவ்வாய்கிரக பயணங்கள் உட்பட பல வெற்றிகரமான பயணங்களுடன் நாசா விண்வெளி மற்றும் பூமிக்கு அப்பால் மனித ஆய்வுகளை விரிவுபடுத்தி உள்ளது. பனிப்போரின் போது அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான விண்வெளி போட்டியில் (Space race) சோவியத் யூனியனுக்கு பதிலளிக்கும் வகையில் நாசாவின் பயணம் தொடங்கியது.

ஜீலை 29 1958 இல் ஜனாதிபதி Dwight D.Eisenhower தேசிய வானூர்தி மட்டும் விண்வெளி சட்டத்தில் கையெழுத்துட்டு நாசாவை சிவில் நிறுவனமாக நிறுவினார். அன்றிலிருந்து NASA விண்வெளி ஆய்வு மற்றும் அறிவியல் மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

முக்கிய சாதனைகள்

Appollo Moon Landing


சந்திரனில் மனிதர்களை வெற்றிகரமாக தரையிறக்கிய அப்பல்லோ திட்டம் நாசாவின் மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்றாகும் 1969 இல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திர மேற்பரப்பில் கால் பதித்தார். இக் குறிப்பிடத்தக்க சாதனை நாசாவின் உறுதியை உலகிற்கு வெளிப்படுத்தியது.

Apollo moon landing
Apollo moon landing

Huble Space Telescope


1990 இல் ஏவப்பட்ட (Launch) ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது தொலைதூர விண்மீன் திரள்கள், நெபுலாக்கள் மற்றும் கோள்களின் திகைப்பூட்டும் புகைப்படங்களை வழங்கி உள்ளது. பிரபஞ்சம் பற்றி நமது புரிதலை மாற்றியமைத்து அதன் பரந்த தன்மையையும் அழகையும் வெளிப்படுத்துகிறது. இத்தொலைநோக்கியானது புவியின் கண் என்று வர்ணிக்கப்படுகிறது.

James web

james web telescope

நமது பிரபஞ்சம் தோன்றிய போது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஏவப்பட்ட hubble தொவைநோக்கியின் ஆயுட்காலம் முடிவடையவிருக்கும் நிலையில் அதன் வாரிசாக இத் தொலைநோக்கி ஏவப்பட்டுள்ளது.

இத்தொலை நோக்கி Hubble தொலைநோக்கியை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும். இத்தொலைநோக்கி சுமார் 10 ஆண்டுகளை கடந்து விண்வெளியில் இருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவிற்கு எரிபொருளைக் கொண்டது என கூறப்படுகிறது.

பேரண்டத்தை புகைப்படம் எடுப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. பேரண்டத்தில் தூசிப்படலங்கள் நிரம்பியுள்ளதால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் புலப்படாது எனவே அகச்சிவப்புக் கதிர்கள் போன்றவற்றை பயன்படுத்தி அதிநவீன கருவிகள் மூலம் தரவுகள் திரட்டப்பட்டு அதை படமாக்கப்பட வேண்டும்.

உலகம் எவ்வாறு உருவாகியது தொடர்பான தேடல் அனைவருக்கும் இருக்கும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் உலகம் ஒவ்வொரு தோன்றியது என்பதை கூட கண்டறிய முடியும் என்று கூறுகிறார்கள். இது நாசாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் முக்கியமானதாகும்.

top space agencies in the world
top space agencies in the world

RFSA – Russian Federal Space Agency

ரஷ்ய நாட்டின் விண்வெளி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரசாங்கம் அமைப்பாகும். இது உலகளாவிய பழமையான புகழ்பெற்ற விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாகும். இது பிரபலமாக Roscosmos என அறியப்படுகின்றது. 1992 பெப்ரவரி 25 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

விலங்குகளை முதன் முதலில் விண்வெளிக்கு அனுப்பிய நாடு , முதல் விண்வெளி மனிதர் (Yuri Gagarin) , முதல் பெண் விண்வெளி வீரர் (Valentina Tereshkova (1961 இல்)) விண்வெளிக்கு அனுப்பிய முதல் நாடு மற்றும் முதல் செயற்கை கோளை (ஸ்புட்னிக் – 1 (1957 இல்)) விண்ணில் ஏவிய நாடு போன்ற பெருமைகளை உடையது ரஷ்யா. மேலும் சந்திரனுக்கு அருகில் சென்ற முதல் விண்கலம் (Spacecraft) ரஷ்யாவின் Luna-1 எனப்படும் விண்கலமாகும்.


1950 களில் சோவியத் விண்வெளித்திட்டம் ஸ்தாபிக்கப்பட்டது. அக்காலத்திலேயே மேற்குறிப்பிட்ட சாதனைகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டது சோவியத்யூனியன் மற்றும் நாசாவுக்கு இடையில் கடுமையான பனிப்போரின் போது இவ்வாறான பல சாதனைகள் சோவியத்யூனியனால் நிகழ்த்தப்பட்டது. பின்னர் 1951 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து Roscosmos தோன்றியது சோவியத் திட்டத்தின் வாரிசாக இது கருதப்படுகின்றது.

top space agencies in the world

ISRO – Indian Space Research Organisation

இதுவரை மேற்கொண்டு சாதனைகள் அனைத்தும் குறைந்த செலவு 75 மில்லியன் டொலர்களுக்கு என்ற மிகக் குறைந்த செலவில் செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை படைத்தது. இவ்வாறான சாதனைகள் மற்றும் குறைந்த செலவில் மிகத் திறமையான விண்வெளி பயணங்களை திட்டமிடுவதில் இந்த முன்னிலை வகுத்துள்ளது.


இந்தியாவின் முதன்மையான விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ISRO 1969 இல் நிறுவப்பட்டது. மற்றைய விண்வெளி நிறுவனங்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது இஸ்ரோ இளமையாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது. உலக விண்வெளி சமூகத்தில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. 1969 இல் டாக்டர் விக்ரம் சாராபாய் தலைமையில் ISRO ஸ்தாபிக்கப்பட்டது.

சாதனைகள்

1975 இல் தனது முதல் செயற்கைக்கோளான Aryabhata இனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.


2013 இல் செவ்வாயின் சுற்றுப்பாதையில் Mangalyaan ($75 மில்லியன் மாத்திரம்) வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக அடைந்த நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.


இந்தியாவின் முதல் சந்திர ஆய்வு சந்திராயன்-1 மூலம் ஆரம்பமாகியது. 2008 இல் சந்திராயன்-1 (PSLV –XL rocket மூலம்) வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது. இது நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. ISRO இன் குறிப்பிடத்தக்க சாதனைகளில் இது முக்கியமாகும். இந்த வெற்றியை தொடர்ந்து ISRO விடாமுயற்சியுடன் 2019 ல் சந்திராயன்-2 விண்கலத்தினை செலுத்தியது


2014 ஆம் ஆண்டு ஒரே ஒரு ரொக்கெட்டைப் (PSLV-37) பயன்படுத்தி 104 செயற்கைக்கோள்களை சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தி இந்தியா உலக சாதனை படைத்தது

எளிமையான தொடக்கத்திலிருந்து உலகத் திறம் வாய்ந்த விண்வெளி நிறுவனமான உருவான இஸ்ரோவின் பயணம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.

space agency ranking

ESA- The European Space Agency

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் என்பது ஆய்வுக்கான 22 உறுப்பு நாடுகளின் ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பாகும். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க் உட்பட 22 நாடுகளை கொண்ட அமைந்துள்ளது. 1975 இல் பாரிசை தலைமை கொண்டு நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வு முயற்சிகள் ஈடுபாடு அதிகமாகியது.

ESA ற்கு அடித்தளமிட்ட முக்கிய அமைப்புகள்


ELDO – European Launchr Development Organisation
1962 இல் நிறுவப்பட்டது. செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த தேவையான விண்வெளி ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. உதாரணமாக (European Rocket) போன்றவற்றை குறிப்பிடலாம்.


ESRO –European Space Rearch Organisation
1964 இல் உருவாக்கப்பட்டது. செயற்கைக்கோள்களை சுற்றிப்பாதையில் நிலைநிறுத்தி அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ESRO-2B , ESRO-4 போன்ற செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது.

சாதனைகள்


Venus mission, Rosetta Mission, Mars mission, Corot space telescope mission போன்ற பல திட்டங்களில் சாதனை படைத்தது. ESA வின் பிரபலமான திட்டங்களில் ஒன்று வீனஸ் எக்ஸ்பிரஸ் ஆகும். நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்றைய கோள்களுக்கு அருகில் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடியது. சூரியனின் கதிர்கள் விண்கலத்தை பாதிக்காதவாறு ESA அதனை வடிவமைத்தது.


1978ல் ஏவப்பட்டு 18 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கிய உலகின் முதல் உயர்சுற்றுப் பாதை தொலைநோக்கியான IUE- International Ultraviolet explorer) NASA உடன் இணைந்து ESA இனால் உருவாக்கப்பட்டது.

CNSA – China National Space Administration

CNSA உலகின் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் பொதுவாக ஏனைய விண்வெளி ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது இல்லை. மேலும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS- International Space Station) அதிலும் இந்நிறுவனம் அங்கம் வகிக்கவில்லை. மேலும் இந்நிறுவனம் தனக்கென விண்வெளியில் தனியான ஒரு சிறிய விண்வெளி நிலையத்தையும் கொண்டுள்ளது.

சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமானது 1993 இல் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் பல விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.


விண்வெளி விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் (UNOOSA) பராமரிக்கப்படும் விண்வெளியில் ஏவப்பட்ட பொருட்களின் அட்டவணையின் படி ஜீன் 2023 இன் இறுதி நிலவரப்படி பூமியைச்சுற்றி 11330 தனிப்பட்ட செயற்கைக்கோள்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானது சீனாவின் (CNSA) மட்டுமே ஏவியுள்ளதாக கூறப்படுகிறது.

சாதனைகள்


1993 நிறுவப்பட்டிருந்தாலும் குறுகிய வரலாற்றில் பல சாதனைகளை செய்து காட்டியுள்ளது சீனாவின் CNSA. சந்திரனின் தொலைதூரத்தில் குறிப்பாக தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் விண்வெளி நிறுவனம் இதுவாகும்.

இது 2018ல் Change’4 இனால் நிகழ்த்தப்பட்டது. சந்திரனின் தென்துருவப்பகுதியானது இதற்கு முன்னர் தரை இறங்கிய Apollo போன்ற விண்கலங்களால் ஆய்வு செய்யப்படாத பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. Appollo போன்று விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்லாமல் Change’4 ஆனது ஆய்வுகளை மேற்கொள்வதற்காக Yuttu-2 என்ற ரோவரை எடுத்து சென்றது.


Change’4 மற்றும் Tianwen-1 Mission போன்றனவும் CNSA இனுடைய சாதனைகளாகும்.

top space agencies in the world

SpaceX – Space Exploration Technologies Corporation

SpaceX என்பது இதுவரை பார்த்த விண்வெளி நிறுவனங்களைப் போல் அல்லாமல் உலக பணக்காரரான எலான் மஸ்க் (Elon musk) என்பவரின் தனியார் நிறுவனம் ஆகும். தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஏனைய அரச நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

வரலாறு


விண்வெளிப் போக்குவரத்து செலவுகளை குறைத்தல், செவ்வாய்க்கிரக ஆய்வு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு 2002 இல் நிறுவனம் உருவாக்கப்பட்டது.


பூமியின் சுற்றிப் பாதையில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய தனியார் நிறுவனம் என்ற பெருமையை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. SpaceX நிறுவனத்தின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்குவது ஆகும்.

விண்வெளி ஆய்வின் முதன்மை நிறுவனமான நாசாவினால் கூட அத்தகைய ராக்கெட் ஒன்றினை உருவாக்க முடியவில்லை ஆனால் SpaceX அதனை செய்து காட்டியுள்ளது. இந்த மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டுகளின் முன்னேற்றமானது விண்வெளிப் பயணத்தில் செலவை கணிசமாக குறைக்கின்றது. இவ்வாறான மறு பயன்பாட்டு ராக்கெட்டுக்கள் ISS ற்கு விண்வெளி உபகரணங்கள் மற்றும் விண்வெளி வீரர்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு 2012 ல் ஒரு விண்கலம் (Dragon c2+) அனுப்பப்பட்டது.

JAXA –Japan Aero Space Exploration Agency

ஜப்பானிய அரசாங்கத்தின் தேசிய தேசிய விண்வெளி நிறுவனம் JAXA என அழைக்கப்படுகிறது. இது 2003 நிறுவப்பட்டது. டோக்கியோவில் தலைமையகம் அமைந்துள்ளது. JAXA எனப்படும் நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன்பு ஜப்பானில் மூன்று நிறுவனங்கள் விண்வெளி தொடர்பான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டன. அம்மூன்று நிறுவனங்களையும் ஒன்றிணைத்து 2003 october 1 இல் JAXA உருவாக்கப்பட்டுது.

JAXA இன் hayabusa எனப்படும் விண்கலமானது 2003 இல் Hokawa என்ற சிறுகோளுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து 2010 இல் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இவ்வாறு சிறு கோளிலிருந்து மாதிரிகளை சேகரித்த முதல் நாடாக ஜப்பான் இடம்பெற்றது. இவ்வாறு பல சாதனைகளை துயுஓயு நிறுவனம் நிகழ்த்தியுள்ளது

  • German Aerospace Center – DLR)
  • Italian Aerospace Center (ASI)
  • Naional Centre for Space Studies (France)


போன்றனவும் பிரபலமான விண்வெளி நிறுவனங்களாகும்.

உங்கள் ஆக்கங்களை எமது இணையத்தளத்தில் காட்சிப்படுத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும் Contact us

இவற்றையும் படியுங்கள்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *