USSD குறிமுறை என்றால் என்ன அதன் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்
அறிமுகம்
இந்த டிஜிட்டல் (Digital) உலகத்தில் மொபைல் போன்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டன. தொடர்பாடல், போக்குவரத்து, பொழுதுபோக்கு வியாபாரம் மற்றும் கல்வித்துறை என பல்வேறு துறைகளிலும் மொபைல் போன்கள் மற்றும் கணினிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
இன்றைய உலகில் நம் அன்றாட வாழ்வின் ஏராளமான வேலைகளை இலகுவாக்க தொழினுட்பம் உதவுகின்றது. அந்த வகையில் தொழினுட்பம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதும் இன்றியமையாத ஒன்றாகும்.
USSD (Unstructured Supplementary Service Data) என்பது மொபைல் நெட்வேர்க் ஆபடேரர்களால் மொபைல் சாதனத்திற்கும் சேவை வழங்குனரின் கணினிக்கும் இடையே உடனடியான நிகழ்நேரத்தொடர்பை ஏற்படுத்துகவதற்கு பயன்படுத்தும் ஒருவகையான நெறிமுறையாகும்.
இக்குறியீடுகள் பொதுவாக பயனரின் செல்லிடத்தொலைபேசியில் விசைப்பலகையை பயன்படுத்தி டயல் (Dial) செய்யப்படுகின்றது. பொதுவாக இக்குறியீடுகள் நட்சத்திரக்குறியீட்டில் Star(*) ஆரம்பித்து அதனைத்தொடர்ந்து இலக்கங்களும் இறுதியில் hash(#) குறியீட்டுடன் முடிவடையும். மேலும் பயனர்கள் தகவல்களைப் பெறவும் பல்வேறு சேவைகளை அணுகவும் விரைவாகவும் வசதியாகவும் செயல்களைச் செய்ய அனுமதிக்கின்றது.
USSD குறிமுறையொன்றை Dial செய்யும் போது பயனரின் தொலைபேசி மற்றும் இணைய சேவை வழங்குனரின் (ISP) சேவையகத்திற்கிடையே இணைப்பு ஏற்படுத்தப்படுகின்றது. சேவை வழங்குனரின் சேவையகங்களிலிருந்து தகவல்களைப் பெறவும், செயல்களைச் செய்யவும், தகவல்களைப் பெறவும். இவ் இணைப்பு பயன்படுத்தப்படுகின்றது.
USSD குறியீடுகள் மூலம் பெறப்படும் தகவல்கள் ஆகக்கூடுதலாக 182 எழுத்துக்கள் வரை நீளமானதாக காணப்படலாம். Prepaid SIM களிலுள்ள கணக்கு மீதியை அறிதல், Data பொதிகள் பற்றிய விபரங்களை அறிதல், Loan சேவை மற்றும் USSD குறிமுறையிலமைந்த பணப்பரிமாற்ற சேவை ஆகியவற்றுக்கும் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிள்றது.
USSD குறிமுறையானது மெனு (Menu) அடிப்படையிலான சேவைகளை பயனருக்கு வழங்குகின்றது. பல்வேறு மெனுக்களில் இருந்து ஒன்றை தெரிவு செய்து தேவையான தகவல்களை பெறவும், பரிமாற்றங்களை விரைவாக மேற்கொள்ளவும் உதவியாக அமைகின்றது.

நன்மைகள்
USSD குறியீடுகள் GSM நெட்வேர்க் மூலம் செயற்படுகின்றன. இது இணையம் இல்லாமல் வேலை செய்யக்கூடியதாகையால் இணையம் இல்லாத பகுதிகளில் மிக்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணைய வசதி இல்லாத அடிப்படை செல்லிடத்தொலைபேசிகளில் கூட USSD இனைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றங்கள் உட்பட தகவல்களை பெறுதல் போன்ற சேவைகளை அணுகக்கூடியதாக இருக்கும்.
USSD குறிமுறை எவ்வாறு வேலை செய்கின்றது.

SMS செய்திகளைப் போலல்லாமல் USSD குறிமுறைகள் நிகழ்நேர இணைப்பை உருவாக்குகின்றன. அதாவது பயனரின் மெனு தெரிவுகளுக்கு ஏற்றவாறு உடனடியான பதிலை வழங்குகின்றது. உதாரணமாக பயனர் USSD குறிமுறை மூலம் கணக்கில் உள்ள பணத்திற்கான மீதியை சரிபார்ப்பதற்கான வினவலை வழங்கும் போது USSD Gateway ஆனது அவ்வினவலை சேவையகத்தில் உள்ள பயனரின் USSD Application ற்கு அனுப்புகிறது. ஆவ் Application ஆனது பயனருக்கான பதிலை USSD Gateway ற்கு வழங்குவதோடு அவ் Gateway ஆனது பயனருடைய சாதனத்தின் திரையில் பதிலை காண்பிக்கும்.
பயன்பாடுகள்
USSD குறிமறைகள் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
மொபைல் வங்கி
USSD குறிமுறைகளைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மை என்னவெனில் இணையம் இன்றி இதனைப் பயன்படுத்த முடயும் அதாவது Smartphone மற்றும் இணையவசதி இல்லாதவர்க்ள் USSD குறிமுறை மூலம் வங்கி மீதியை சரிபார்த்தல், பணப்பரிமாற்றங்களை செய்தல் போன்ற வங்கி நடவடிக்கைகளை இலகுவாகவும் வேகமாகவும் மேற்கொள்ள முடியும்.
மொபைல் சந்தைப்படுத்தல் (Mobile Marketting)
நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்கள் உடனடியாக பதிலளிக்கக்கூடியதான Survey களை USSD குறிமுறை மூலம் அனுப்பலாம். SMS போலல்லாமல் பயனர்களிடமிருந்து உடனடியான பதில்களை பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையளருடைய பின்னூட்டல்களைப் (Feedback) பெற்றுக்கொள்வதற்காக நிறுவனங்கள் இதனைப் பெரிதும் பயன்படுத்துகின்றன.
Order confirmation
உணவு டெலிவரி (Delivery) செய்பவர்கள் USSD இனைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கும் விற்பனையாளவுக்கும் இடையே இருவழித்தொடர்பை செயற்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் Order கள் வரும்போது எச்சரிக்கை(Alert) செய்யலாம்.
இவ்வாறு USSD இன் பயன்கள் ஏராளமாக உள்ளது.
பொதுவாக பயன்படுத்தப்படும் சில USSD குறியீடுகள்
உங்கள் சேவை வழங்குனர் மற்றும் வசிக்கும் நாட்டைப் பொறுத்து குறிப்பிட்ட USSD குறியீடுகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் வேறுபடலாம்.
Purpose | USSD |
Balance check (pre/post) | *550# (pre) *555# (post) |
Recharge | *567#<card No># |
Customer care | – |
Loan | #247# |
Ownership | #132# |
Data balance | *550# |
Other Service | *155# |
முடிவு
USSD குறியீடுகள் சக்திவாய்ந்த கருவியாக பயனர்களுக்கு நிகழ்நேர செயற்பாடுகளின் மூலம் இணைய இணைப்பை சார்ந்திருக்காமல் தகவல்களை அணுகவும், கணக்குகளை நிர்வகிக்கவும் மற்றும் பல்வேறு பணிகளை செய்யவும் வசதியான சூழலை வழங்குகின்றது. இணையம் இல்லாத அடிப்படை தொலைபேசிகளில் கூட USSD குறிமுறைகளைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள சிறந்த கருவியாக விளங்குகின்றது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்
USSD குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டணங்கள் ஏதும் உண்டா?
பெரும்பாலான மொபைல் ஆபரேட்டர்கள் USSD குறியீட்டு அணுகலை இலவசமாக வழங்குகிறார்கள். இருப்பினும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் வரையறைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட் நெட்வேர்க் ஆபரேட்டரை தொடர்பு கொள்வது சிறந்தது.
எந்தவொரு சாதனத்திலும் USSD குறிமுறை அணுகலை பயன்படுத்த முடியுமா?
ஆம் GSM தொழினுட்பத்தை கொண்டிருக்கும் எந்தவொரு மொபைல் சாதனத்திலும் USSD குறியீடுகளைக் பயன்படுத்தலாம். உங்களிடம் அடிப்படை அம்சத் தொலைபேசி இருந்தாலும் அல்லது Smartphone கள் இருந்தாலும் கூட இவ் USSD குறிமுறை அணுகலைப் பயன்படுத்த முடியும்
USSD குறியீடுகள் பாதுகாப்பானதா?
USSD குறியீடுகள் பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்ன ஏனெனில் அவை உங்கள் சாதனத்திற்கும் குறிப்பிட்ட சேவை வழங்குனரின் சேவையகத்திற்குமிடையே நேரடி இணைப்பை ஏற்படுத்துகின்றது.
எனது நெட்வேர்க் ற்கு பொருத்தமான USSD குறியீடுகளை எவ்வாறு கண்டறிவது?
ஆம் மொபைல் நெட்வேர்க் ஆபரேட்டர்களுக்கு இடையே குறிப்பிட்ட USSD குறியீடுகள் மாற்றமடையலாம். உங்கள் நெட்வேர்க் ஆபரேடர்களுக்கு பொருத்தமான USSD குறியீடுகளை குறித்த இணைய சேவை வழங்குனரின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலோ அல்லது வாடிக்கையாளர் ஆதரவைத் (Customer Support) தொடர்பு கொள்வதன் மூலமோ கண்டறிய முடியும்
இவற்றையும் படியுங்கள்
- பயனுள்ள 10 கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்கள்
- Blockchain தொழினுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
- உங்கள் வேலையை இலகுவாக்கும் 6 AI கருவிகள்
Everything is very open with a really clear description of the issues. It was definitely informative. Your site is useful. Thank you for sharing!