Prime

விண்வெளி ஆய்வு மையங்களால் மேற்கொள்ளப்படும் பணிகள்

செயற்கை கோள் வரிசைப்படுத்தல் (Satellite Deployment)

விண்வெளியுடனான தகவல் தொடர்பு , வானிலை கண்காணிப்பு மற்றும் விண்வெளி தொடர்பான அறிவியல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக செயற்கைக்கோள்களை (Satellites) விண்வெளியில் செலுத்துவது இவ் விண்வெளி மத்திய நிலையங்களின் கருமங்களில் பிரதானமானதாகும்.

Space exploration

கோள்களை ஆய்வு செய்தல்


சிறுகோள்கள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக விண்கலங்களை அனுப்புதல். இங்கே நாம் செயற்கைக்கோள் மற்றும் விண்கலத்திற்கு இடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். விண்கலம் என்பது விண்வெளி பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம் என கூறலாம். இவை விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும். செயற்கைகோள் என்பது விண்கலத்தின் ஒரு பகுதியாகும். இவை பொதுவாக பூமியைச் சுற்றி வருகின்றது. (முழமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்)

மனித விண்வெளிப் பயணம் (Human Spaceflight)


விண்வெளி வீரர்களுடன் விண்வெளி பயணங்களை ஏற்பாடு செய்து விண்வெளியில் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்தலும் புவி ஈர்ப்பு விசை தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதும் இவ்விண்வெளி மத்தியில் நிலையங்களில் செயற்பாடுகளில் ஒன்றாகும்.

விண்வெளி நிலையத்தை நிர்வகித்தல் (Space station)

விண்வெளி நிலையம் என்பது பூமியின் சுற்றும் பாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு விண்கலமாகும் (Spacecraft) விண்வெளி வீரர்கள் நீண்ட காலத்திற்கு தங்கியிருந்து ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள். ஒரு விண்வெளி நிலையத்தின் முதன்மை நோக்கம் விண்வெளியில் புவியீர்ப்பு மற்றும் பிற வளிமண்டல கூறுகள் இல்லாததால் பூமியில் மேற்கொள்ள முடியாத ஆராய்ச்சிகள் பலவற்றை மேற்கொள்வதாகும்.

விண்வெளி நிலையம் பற்றியும் அதன் வரலாறு வெற்றியும் அதன் நோக்கம் வெற்றியும் முழுமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளோம். (பார்வையிட)


விண்வெளி நிலையத்திற்கு உதாரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கூறலாம் (ISS –International Space Station) இவச்நிலையம் (NASA-America, Roscosmos –Rusia, ESA, JAXA-Japan, மற்றும் CSA –Canadian ) போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

விண்வெளி தொலைநோக்கிகள்

தொலைதூர வன்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக விண்வெளி தொலைநோக்கிகளை உருவாக்கி ஏவுதல். உதாரணமாக ஹப்பிள் (Hubble Space Telescope) விண்வெளி தொலைநோக்கியை கூறலாம்.

விண்கல மேம்பாடு


கிரகங்களை ஆய்வு செய்வதற்கு தேவையான விண்கலத்தை (Spacecraft) வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் பணியை விண்வெளி ஆய்வு மையங்கள் மேற்கொள்கின்றன. விண்கல மேம்பாட்டு செய்முறை என்பது சிக்கலான மற்றும் நுணுக்கமான செயல்முறையாகும். rovers மற்றும் அதற்கான landers களை உருவாக்குதல் போன்றனவும் அடங்கும். விண்வெளியாக வாகனங்கள் தொடர்பான முழமையான கட்டுரை பார்க்கவும்

மாதிரிகளை திருப்பும் பணிகள் (Sample returns mission)


சந்திரனின் மேற்பரப்பு மற்றும் சிறுகோளிலிருந்து மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்வதற்காக பத்திரமாக அதை பூமிக்கு திருப்புதல் வேண்டும். இப்பணியை விண்வெளி ஆய்வு மையங்கள் செயல்படுத்துகின்றன.

கல்வி மற்றும் அறிவு பகிர்வு

அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு கல்வி தொடர்பான விடயங்களை போதித்தல் விண்வெளி ஆய்வு மையங்களில் செயல்பாடுகளில் ஒன்றாகும்.

விண்வெளி குப்பைகளை கண்காணித்தல் மற்றும் தணித்தல்


பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் செயற்கைக்கோள் ஏவதல், விண்வெளி பயணங்கள் மற்றும் விண்வெளி தொடர்பான தொடர்பான பிற செயற்பாடுகளின் விளைவாக விண்வெளியில் உள்ள தேவையற்ற பொருட்கள் விண்வெளி குப்பைகள் என அழைக்கப்படுகிறது.

செயலிழந்த செயற்கைக்கோள்கள், பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டுகள் போன்றவற்றை குறிக்கின்றது. பூமியின் சுற்றும் பாதையில் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் இவ் விண்வெளிக்கழிவுகள் மனிதனுக்கும் எதிர்கால செயற்கைக்கோள் ஏவதல் மற்றும் விண்வெளிப்பயணங்களுக்கும் இது மிகப்பெரிய தடையாக அமையும்.

ஒரு சிறிய விண்வெளி குப்பை கூட அதன் அதீத வேகம் காரணமாக பாரிய சேதத்தை ஏற்படுத்தலாம். இவற்றை கண்காணிப்பது மற்றும் விண்வெளிக்குப்பைகளைக் குறைப்பது NASA, ISRO, ESA போன்ற விண்வெளி ஆய்வு மையங்களில் பணியாகும். (உலகில் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள …)

விண்வெளி நிறுவனங்கள்

விண்வெளி தொடர்பான கொள்கை மற்றும் ஒழுங்கு முறை, விண்வெளி ஆய்வு, விண்வெளி குப்பைகளை தணித்தல் மற்றும் சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பு, உலகில் உள்ள பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்கள் தமக்கிடையே வளங்களை பகிர்ந்து கொள்ளல் போன்றன விண்வெளி மையங்களின் செயற்பாடுகளாகும்

இவற்றையும் படியுங்கள்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *