Home » News » நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்

|

தமிழ் திரையுலகில் நடிப்பால் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். குணச்சித்திர கதாப்பாத்திரங்கள், காமெடி, வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது அசாத்திய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். எல்லோரிடமும் மிகுந்த அன்பாகவும், இயல்பாகவும் பழகும் பண்பு கொண்டவர்.

இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றி வந்த நிலையில், திரைத் துறையின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அப்பணியை உதறிவிட்டு திரைத் துறைக்கு வந்தவர். இயக்குநர் கே.பாலச்சந்தரால் டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் சுமார் 500க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளன் டெல்லி கணேஷுக்கு இரங்கல் மற்றும் வீர வணக்கம்  தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து,  நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கணேஷுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.