மலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட சேலம் மாவட்டம் ஒரு நிலவியல் சொர்கமாக திகழ்கிறது. ஒரு மாவட்டம் என்ற அளவில் சேலம் பல வகைகளில் தனித்தன்மையுடையதாக விளங்குகிறது. கஞ்சமலை பகுதியில் கிடைக்கும் இரும்பு தாது சேலம் இரும்பாலை திட்டத்திற்கு வழிவகுத்தது. தற்போது சேலம் இரும்பாலை மூலம் பெரிய வார்ப்பிரும்பு பாளங்களிருந்து தேவையான வடிவங்களில் இரும்பு தகடுகள் தயாரிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழங்களின் இனிப்பு எல்லோராலும் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக மல்கோவா மாம்பழங்கள் சேலத்தின் பெருமை எனப்போற்றப்படுகிறது
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை கனமழையாக கொட்டியது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் வழக்கத்தை விட இந்தாண்டு அதிக அளவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மேலும் பனி பொழிவு அதிகரிப்பால் மரங்கள், செடி, கொடிகளில் பனிகள் படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்துக்கள் போல காட்சி அளிக்கிறது.