ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். புத்துணச்சி, நம்பிக்கை தரும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டனர்புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை, மதுரை , சிவகாசி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
‘முதன்மை தமிழ் – TamilPrime.com’ சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.