மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி, அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களில் வெற்றி பெற்றது.
தேவேந்திர பட்னாவிஸ் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதத்தை அளித்தார். இதனையடுத்து, ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கெனவே இரண்டு முறை முதல்வராக இருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.