மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என மிரட்டும் மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டன அறிக்கைகளை மட்டும் கொடுக்காமல் நெருக்கடி கொடுத்து நிதியை பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
