Home » News » தமிழக பட்ஜெட்டுக்கு பாராட்டு: தே.மு.தி.க: பிரேமலதா விஜயகாந்த்

தமிழக பட்ஜெட்டுக்கு பாராட்டு: தே.மு.தி.க: பிரேமலதா விஜயகாந்த்

|

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2006-ல் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எனவே நாங்கள் அதை வரவேற்கிறோம்.


மதிய உணவு திட்டம் மட்டும் இருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் தே.மு.தி.க. கொண்டுவர இருந்த திட்டதான். காலை உணவு திட்டம் கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களும், விவசாயிகள் வாழ்வாதத்திற்கான திட்டங்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2006-ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.