Home » News » அரசு வங்கியில் உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்!! 85 ஆயிரம் சம்பளம்.. டிகிரி போதும்!

அரசு வங்கியில் உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்!! 85 ஆயிரம் சம்பளம்.. டிகிரி போதும்!

|

சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் வழியாகவும் நேரடியாகவும் நிரப்பபடுகின்றன.

பணியிடங்கள்& கல்வி தகுதி: லோக்கல் பேங்க் ஆபிசர்- JMGS-I: 1,500 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடவர்கள். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.

தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோயில்/ கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.175 ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இன்று (24.10.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.