Home » News » வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி!

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி!

|

திருவனந்தபுரம்: கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்று எம்பியானார். இதனை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வயநாடு+ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று எம்பியானார். ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே எம்பியாக இருக்க முடியும் என்பது விதி. எனவே, வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்

வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி இந்த தொகுதியின் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

.