Home » News » ரூல் செய்ய வருகிறான் புஷ்பா 2 – டிரெயிலர் வெளியீடு

ரூல் செய்ய வருகிறான் புஷ்பா 2 – டிரெயிலர் வெளியீடு

|

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளது. டிரைலர் வெளியீட்டு விழா பாட் னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்தது. படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைலர் வெளியீட்டு விழாழுக்காக படக்குழு தற்பொழுது பாட்னா சென்றுள்ளனர்.