Home » News » பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

|

கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை தாங்கினார்.

இந்த வரலாற்றுமிக்க நிகழ்வில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திருமாவளவன் மற்றும்  அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமூக நீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கம் நகரில் தமிழகம், கேரள அரசு இணைந்து கொண்டாடுவது சிறப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.