Home » News » விஜய் மீது தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை: திருமாவளவன் பேட்டி

விஜய் மீது தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை: திருமாவளவன் பேட்டி

|

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடந்தது. அந்த விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், தன்னுடைய கொள்கை என்ன, அரசியல் எதிரிகள் யார், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு, கட்சியின் செயல்திட்டங்கள் என்ன என்பது பற்றி விவரித்தார். சுமார் 45 நிமிடம் பேசிய விஜய், பாஜகவை பொது எதிரி என்றும் (மறைமுகமாக), திமுவை அரசியல் எதிரி என்றும் நேரடியாக தாக்கி பேசினார். திமுகவை பாசிசம் பாயாசம் என்றும், ஊழல் மலிந்த திராவிட மாடல் ஆட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

பாசிஸ்டுகள் என்று திமுகவை மட்டும் கூறுகிறாரா அல்லது திமுக கூட்டணியில் உள்ள 28 கட்சிகளைக் கூறுகிறாரா என்று தெரியவில்லை. பாசிச எதிர்ப்பு தேவை இல்லை என்று கூறுவதால் பாஜக எதிர்ப்பு தேவை இல்லை என்று நினைக்கிறாரா? பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பதை அவர் உரை முழுவதும் நமக்கு உணர்த்துகிறது. அவரது உரை முழுவதும் திமுக எதிர்ப்பு நெடி காட்டுகிறது.திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கிறார். குடும்ப ஆட்சி என்று கருணாநிதி குடும்பத்தை எதிர்க்கிறார். இது ஒரு புதிய அரசியல் நிலைப்பாடு அல்ல. தமிழகத்தில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் தான். இது மக்களிடத்தில் எடுபடவில்லை என்பது தான் வரலாறு உணர்த்துகிறது. உண்மையில் அதிகாரப் பகிர்வை அளிப்பதாக இருந்தால், இதனை மறைமுக செயல்திட்டமாகக் கையாண்டிருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.

விசிகவை திமுக கூட்டணியில் உள்ள கட்சியாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். திமுக கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியாகும். இந்த கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியின் நோக்கத்தை நோக்கி பயணிப்பதுதான் விசிகவின் தேவையாக இருக்க முடியும். அந்த கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று நான் ஏன் முடிவு செய்ய வேண்டும்? அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவுமே இங்கு இல்லை

திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் தொட்டிருக்கிறோம். உள்ளே இருந்து எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு” என்றார்.