Home » News » தாக்குதலை ஆரம்பித்த துருக்கி.. சிரியா, ஈராக்கில் குண்டுமழை.. வெடிக்கும் பிராந்திய போர்?

தாக்குதலை ஆரம்பித்த துருக்கி.. சிரியா, ஈராக்கில் குண்டுமழை.. வெடிக்கும் பிராந்திய போர்?

|

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்தே வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல்- ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் தொடர்கிறது. மறுபுறம் ஈரான் உடனும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் இப்போது துருக்கியும் சிரியாவில் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது நிலைமை மோசமாக்குகிறது.

இதையடுத்து இப்போது சிரியா மற்றும் துருக்கியில் உள்ள குர்திஷ் போராளிகளைக் குறிவைத்து துருக்கியும் தாக்குதலை நடத்தியுள்ளது. குர்ஷித் போராளிகளுக்குத் தொடர்புடைய பல இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் துருக்கியின் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.