Home » News » தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு  

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு  

நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் நடந்துவரும் முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அங்கு அமைத்த நடைமேடையில் நடந்து செல்ல செல்ல ரசிகர்கள் கட்சியின் துண்டை தூக்கி தலைவர் மேல் வீச அதை எடுத்து கழுத்தில் போட்டு கொண்டார் விஜய்.புன்னகையுடன் தொண்டர்கள் வீசிய துண்டுகளை லாவகமாக பிடித்து தனது கழுத்தில் போட்டுக்கொண்டார் தலைவர் விஜய்.

மகனின் அரசியல் மாநாட்டை காண முதல் வரிசையில் பாசத்துடன் பார்க்கும் அப்பா சந்திர சேகர் மற்றும் அம்மா சோபா

100 அடி உயர  கட்சி கொடியை ரிமோட் மூலமாக திறந்து வைத்தார் தவெக கட்சி தலைவர் விஜய். இந்த கூட்டத்தில் லட்சகணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

தனது பேச்சில் திமுக மற்றும் சீமானை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசினார்

இங்க ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிய பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறதும் இல்லை.. அதுக்காக மொத்தமாக கண்ண மூடிட்டு இருக்க போறதும் இல்லை. இப்போ என்ன தேவை.. இதை எப்படி தீர்த்து வைப்பது.. இப்ப என்ன பிராப்ளம்.. அதை தீர்க்க என்ன செய்யனும்.. இப்படி யோசிச்சா போதும்

கடவுள் மறுப்பில் உடன்பாடு இல்லை. ஆனால் தந்தை பெரியார் வழியில் என்றது உடனே அரசியல் சாயம் பூசுகிறார்கள். சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனையை முன்னெடுப்போம் என்று சொன்னால் உடனே பெயிண்ட் டப்பாவை தூக்கிட்டு வந்துட்றாங்க.

ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்ய போகிறோம்.. எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் அது நல்லா இருக்குமா.. இதுக்கு என்ன செஞ்சா தீர்வு வரும்னு.யோசிச்சு முடிவு எடுத்தது தான் அரசியல் இவ்வாறு அவர் பேசினார்.