Home » News » நயன்தாரா – கவின் இணையும் ‘ஹாய்’ படத்தின் கன்னக்குழியா  முதல் பாடல் வெளியீடு…!

நயன்தாரா – கவின் இணையும் ‘ஹாய்’ படத்தின் கன்னக்குழியா  முதல் பாடல் வெளியீடு…!

|

கவின் கடந்த ஆண்டு நடித்த மாஸ்க் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்று நல்ல வசூலை பெற்றது. தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகர் கவின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஹாய். இவர்களுடன் நடிகர் பிரபு, பாக்யராஜ், ராதிகா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘கன்னக்குழியா’ இன்று வெளியாகி உள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார்.