சென்னை எழில் நகரில் மக்கு நாமே திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர்.
அப்போது, அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்து உள்ளாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அளித்த தமிழக முதலமைச்சர், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என கூறிவிட்டு சென்றார்.
மருத்துவர் ராமதாஸை மரியாதை குறைவாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஒரு முதலமைச்சர் இவ்வாறு பேசுவது அவர் வகுத்து வரும் பதவிக்கு அழகு அல்ல என பாமக தலைவரும், பாமக நிறுவனர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.