2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
வார்டு எல்லை மறுவரையறை பணிகள் நடந்து வரும் நிலையில், பணிகளை விரைந்து முடித்து தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச.,21) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில்,’ வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தனர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீது குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.